தமிழக அரசியலில் புதிய கல்விக் கொள்கை விவகாரம் மீண்டும் புயலை கிளம்பி இருக்கிறது. இந்த விஷயத்தில் பல்வேறு சச்சையான கருத்துக்களை எழுந்திருக்கின்றன.
அரசியல்
கட்சிகள் தமிழ்நாட்டில் இரண்டு மொழி கொள்கை தான் இருக்க வேண்டும் என்று
கூறுகின்றன. இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் திரு அண்ணாமலை அவர்கள் தமிழக
அரசியல் கட்சி தலைவர்களின் வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் சாதாரண வார்டு
கவுன்சிலர் குழந்தைகள் வரை எல்லோருமே மூன்று மொழிகளை பின்பற்றும் மத்திய
அரசின் பாடத்திட்டத்தை ஏற்று தனியார் பள்ளிகளில் படிக்கிறார்கள்.
ஆனால்,
அரசு பள்ளியில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு மட்டும் இரண்டு மொழி கொள்கை
தான் வேண்டுமாம். அவர்கள் மூன்றாவதாக ஒரு மொழி கற்றுக் கொள்வதில் இங்கு
இருக்கும் கட்சிகளுக்கு என்ன பாதகம் இருந்துவிடப்போகிறது என கேள்வி எழுப்பி
வருகிறார்.
இந்நிலையில்
தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் தலைவரும் நடிகருமான நடிகர் விஜய்
தமிழ்நாட்டில் இரண்டு மொழிகள் தான் ஹிந்தியை திணிக்கும் முயற்சியை கைவிட
வேண்டும் என்று கடுமையான விமர்சனத்தை வைத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு
இருந்தார்.
இந்நிலையில், பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமையகமான கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது
பேசிய அவர் சிபிஎஸ்இ மாணவர்களுக்கு ஹிந்தி மொழி கற்பிக்கப்படுகிறது.
மெட்ரிக் பள்ளி மாணவர்களுக்கு வேறு மொழி படிக்கும் வாய்ப்புகள்
வழங்கப்படுகின்றன. ஆனால், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில்
மட்டும் தொடர்ந்து இரண்டு மொழிகள் மட்டுமே கற்பிக்கப்பட்டு வருகின்றன.
இதன்
காரணமாக அரசு பள்ளிகளில் இருந்து தனியார் பள்ளிகளை நோக்கி பலரும்
செல்கின்றனர். வசதி வாய்ப்பு உடையவர்கள் தனியார் பள்ளிக்கு சென்று
விடுகிறார்கள். ஆனால், அந்த வசதி இல்லாதவர்கள் பல்லை கடித்துக்கொண்டு
தங்களுடைய குழந்தைகளை அரசு பள்ளியில் படிக்க வைத்து வருகிறார்கள்.
தனியார்
பள்ளி மூலம் கிட்டத்தட்ட 30,000 கோடி ரூபாய் மார்க்கெட் உருவாகி
இருக்கிறது. இதற்கான வாய்ப்பை திமுக அரசு ஏற்படுத்தி கொடுக்கிறதா..?
இதற்காகத்தான் இந்த இரண்டு மொழிக் கொள்கையை பற்றி பேசிக்
கொண்டிருக்கிறார்களா..? புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் அரசு
பள்ளிகள் தனியார் பள்ளியில் அளவுக்கு பாடத்திட்ட அளவில் தரம் உயர்ந்து
விடும்.
இதனால்
தனியார் பள்ளிகளுக்கு பாதிப்பு ஏற்படும். அந்த 30,000 கோடி ரூபாய்
மார்க்கெட்டில் ஓட்டை விழுந்து விடும் என்பதற்காக இரண்டு மொழி கொள்கைதான்
என்று அரசியல் கட்சிகள் குரல் கொடுத்து வருகிறார்கள்.
தொடர்ந்து பேசிய அவர் நடிகர் விஜய் சொந்தமாக விஜய் வித்யாஸ்ரம் என்ற ஒரு தனியார் சிபிஎஸ்இ பள்ளியை நடத்திக் கொண்டிருக்கிறார். அந்த பள்ளியில் ஹிந்தி மொழியும் கற்பிக்கப்படுகிறது.
ஆனால், பொதுவெளியில் தமிழ்நாட்டுக்கு இரண்டு மொழி கொள்கைதான் வேண்டும் ஹிந்தி மொழியை திணிக்கக்கூடாது என பேசிக்கொண்டு இருக்கிறார்.
உண்மையாகவே தமிழக மக்களை உணர்வு ரீதியாக தூண்டிவிட்டு அவர்களுடைய எதிர்காலத்தை அவர்களுடைய குழந்தைகளின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் முயற்சியில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு இருக்கின்றன என சாடி இருக்கிறார் அண்ணாமலை.
இது குறித்து உள்ள கருத்து என்ன..? என்பதை கீழே உள்ள கமெண்ட் செக்சனில் பதிவு செய்யுங்கள்.
0 கருத்துகள்