இது ஸ்கூலா..? இல்ல, 5 STAR ஹோட்டலா..? மிரட்டலா இருக்கே..! தீயாய் பரவும் நடிகர் விஜய்யின் School புகைப்படங்கள்..!

 

நடிகர் விஜய் நடத்தும் தனியார் பள்ளியின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

Advertisement

 

இதைப் பார்த்த இணையவாசிகள் இது ஸ்கூலா இல்ல ஃபைவ் ஸ்டார் ஹோட்டலா...? என்று வாயை பிளந்து வருகின்றனர். 

 

அந்த அளவுக்கு பிரம்மாண்டமான முறையில் அதிநவீன வசதிகளுடன் பள்ளியை கட்டப்பட்டு இருக்கிறது. 

 

இந்த பள்ளியில் சிபிஎஸ்சி பாடத்திட்டம் பின்பற்றப்படுகிறது. இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளும் மாணவர்களுக்கு கற்பிக்கப்படுகின்றன. 

 

நடிகர் விஜய் தமிழ்நாட்டில் இரு மொழி கொள்கைதான் இருக்க வேண்டும் ஹிந்தி திணிப்பை கைவிட வேண்டும் புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் ஹிந்தி திணிப்பை செய்ய வேண்டாம் என்று தன்னுடைய காட்டமான அறிக்கையை வெளியிட்டிருந்தார். 

 

இந்நிலையில், பாஜக கட்சியின் தலைவர் அண்ணாமலை நடிகர் விஜயின் பள்ளி குறித்த விவரங்களை வெளியிட்டு இருந்தார். 

 

தன்னுடைய பள்ளியில் பல மொழிகளை மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்கும் நடிகர் விஜய் அரசு பள்ளி மாணவர்கள் என்று வரும்போது மட்டும் இரண்டு மொழிகள் சொல்லிக் கொடுத்தால் போதும் என்று கூறுகிறார். 

 

நடிகர் விஜய் நடத்தக்கூடிய பள்ளிக்கு ஒரு நியாயம்..? அரசு நடத்தக்கூடிய பள்ளிக்கு ஒரு நியாயமா..? இரண்டு பள்ளியும் தமிழ்நாட்டில் தானே இயங்குகிறது.. இரண்டு பள்ளியிலும் தமிழ் நாட்டை சேர்ந்த மாணவர்கள் தானே படிக்கிறார்கள்.. என காட்டமான கேள்விகளை எழுப்பி இருக்கிறார். 

இதற்கு நடிகர் விஜய் என்ன பதில் கொடுக்கப் போகிறார்..? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். 


இந்நிலையில், நடிகர் விஜய்யின் விஜய் வித்தியாஸ்ரம் பள்ளியின் புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகிறது. 

இதனை பார்த்த ரசிகர்கள் இது ஸ்கூலா..? இல்ல, 5 ஸ்டார் ஹோட்டலா..? என்று வாயை பிளந்து வருகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்