புதிய கல்வி கொள்கை குறித்து தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகள் தங்களுடைய நிலைப்பாட்டை அறிவித்து வரும் நிலையில் நடிகர் விஜய்யும் தன்னுடைய நிலைப்பாடு அறிவித்திருந்தார்.
பல்வேறு விஷயங்களை பதிவு செய்த அவர், தற்போது விஜய் விஷயத்திற்கு வருவோம். இங்கே எத்தனை பேருக்கு தெரியும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் படூரில் தனியார் சிபிஎஸ்இ பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார் என்றும்.. அந்த பள்ளியின் பெயர் விஜய் வித்தியாஸ்ரம் என்பதும்.
விஜய் தன்னுடைய இடத்தை 2017 இருந்து 2052 வரை 35 ஆண்டுகளுக்கு தனியார் அறக்கட்டளை ஒன்றுக்கு லீசுக்கு கொடுக்கிறார். அந்த அறக்கட்டளை நடிகர் விஜயின் எஸ் ஏ சந்திரசேகர் (விஜயின் தந்தை) என்பவரின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
அந்த அறக்கட்டளையின் பெயர் வித்யா ( நடிகர் விஜயின் தங்கை) என்ற பெயரில் இயங்கிக் கொண்டிருக்கிறது. இப்படி நடிகர் விஜய் தனியார் பள்ளி ஒன்றை நடித்துக் கொண்டிருக்கிறார்.
அங்கே சிபிஎஸ்இ பாடத்திட்டம் இருக்கிறது. ஹிந்தி மொழியும் கற்பிக்கப்படுகிறது. ஆனால், தற்போது நடிகர் விஜய் இரண்டு மொழி கொள்கைதான் தமிழ்நாட்டிற்கு வேண்டுமென குரல் கொடுக்கிறார் என குண்டை தூக்கி போட்டுள்ளார்.
இது ஒரு பக்கம் இருக்க நடிகர் விஜயின் விஜய் வித்தியாஸ்ரம் பள்ளியின் சொத்து பத்திரம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் விஜய் தன்னுடைய நிலத்தில் கட்டப்பட்டிருக்கும் பள்ளிக்கு எதற்காக குத்தகை கொடுத்தது போல பத்திரம் எழுத வேண்டும்..? நேரடியாகவே தன்னுடைய நிலத்தில் தான் கட்டப்பட்டிருக்கிறது எனும் பொழுது தன்னுடைய தங்கை பெயரில் இயங்கக்கூடிய அறக்கட்டளைக்கு குத்தகை விட்டது போலவும் அந்த பள்ளியின் உரிமையாளர் வேறொருவர் போலவும் காட்டுவதற்காக இப்படியான வேலைகளை செய்திருக்கிறாரா..? என்ற சந்தேகத்தை இணைய பக்கங்களில் எழுப்பி வருகிறார்கள் இணையவாசிகள்.
விஜய் வித்யாஸ்ரம் பள்ளியின் பிரமாண பத்திரத்தை கீழே உள்ள லிங்கில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Vijay Vidhyashram School Affidavit Download (1.23 MB)
இந்நிலையில் இந்த விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டு கொண்டிருக்கிறது.
1 கருத்துகள்
எல்லாம் மக்கள் இளிச்சவாயன் என்று நினைத்து தான். பாமர ரசிகர்கள் ஏதேனும் தெரியுமா இதைத் தான் ஒத்துக்கொள்வார்களா.
பதிலளிநீக்கு