இதனை தொடர்ந்து நடிகர் சூர்யா ஒரு பேட்டியில், தங்கள் பிள்ளைகளின் படிப்புக்காகவே மும்பைக்கு குடிபெயர்ந்ததாகவும், சென்னையை விட மும்பையில் அதிக சர்வதேச பள்ளிகள் இருப்பதால் இந்த முடிவை எடுத்ததாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில், மூத்த பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன், King 24x7 யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில், ஜோதிகா மும்பைக்கு குடிபெயர்ந்தது குறித்து மேலும் சில தகவல்களை பகிர்ந்துள்ளார். ஜோதிகா மும்பைக்கு குடிபெயர்ந்ததற்கான காரணங்களாக அவர் கூறியதாவது:
சிறந்த பள்ளிகள் மற்றும் பல மொழி கல்வி:
ஜோதிகா மும்பையில் உள்ள பள்ளிகளில் பல மொழிகளை கற்கும் வசதி இருப்பதாகவும், தமிழ்நாட்டில் அந்த வசதி கொண்ட பள்ளிகள் குறைவாகவே உள்ளதாகவும் கருதுகிறார். இதனால் தனது பிள்ளைகளின் சிறந்த கல்விக்காக மும்பையை தேர்ந்தெடுத்துள்ளார்.
பெற்றோரை கவனிக்கும் பொறுப்பு:
ஜோதிகாவின் பெற்றோர்கள் வயதானவர்கள் மற்றும் அவர்களுக்கு துணையாக யாரும் இல்லை. மகள் என்ற முறையில் தனது பெற்றோரை கவனித்துக்கொள்ள வேண்டிய கடமை ஜோதிகாவுக்கு உள்ளது.
இதனாலேயே அவர் மும்பையில் தங்கி பெற்றோரை கவனித்து வருகிறார்.
திரைப்படங்களில் கதாநாயகிக்கு முக்கியத்துவம்:
ஜோதிகா இனிமேல் ஒரே மாதிரியான கதாப்பாத்திரங்களில் நடிக்காமல், கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள மற்றும் கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே நடிக்க முடிவு செய்துள்ளார்.
மும்பையில் இருப்பதும் இந்த திரைப்பட வாய்ப்புகளை தேடி பெறுவதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.
உடல் கட்டுக்கோப்பு மற்றும் உடற்பயிற்சி:
ஜோதிகா தனது உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். தினமும் உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்கிறார்.
உடலுக்கு உணவு எவ்வளவு முக்கியமோ, உடற்பயிற்சியும் அவ்வளவு முக்கியம் என்றும் அவர் நம்புகிறார். சென்னையில் ஜோதிகாவின் உடம்புக்கு சரியான உடற்பயிற்சி கிடைக்க வில்லை போல..
இப்படி, பயில்வான் ரங்கநாதன் அவர்கள் ஜோதிகா மும்பையில் வசிப்பதற்கான இந்த பல்வேறு காரணங்களை யூடியூப் பேட்டியில் தெரிவித்துள்ளார்.
ஜோதிகா குடும்பம் மற்றும் தொழில் என இரண்டையும் சமமாக கருதி மும்பையில் செட்டில் ஆகியிருப்பது தெரிகிறது.
0 கருத்துகள்