கீர்த்தி சுரேஷ் ஒரு முடிவோட தான் இருக்காங்க போல.. திருமணதிற்கு பிறகும் இப்படியா..?

முன்னணி நடிகையாக தமிழ் திரையுலகில் வலம் வந்து கொண்டிருக்கும் கீர்த்தி சுரேஷ், சமீபகாலமாக பல்வேறு திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அவரது நடிப்பில் கடைசியாக தமிழில் 'ரகுதாத்தா', 'சைரன்', 'மாமன்னன்' போன்ற படங்கள் வெளியாகின. 

Advertisement

இதில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான 'மாமன்னன்' திரைப்படம் மட்டுமே விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. ஹிந்தியில் அவர் நடித்த 'பேபி ஜான்' திரைப்படம் வணிகரீதியாக எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. 

மலையாள திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ். ஆரம்பத்தில் தமிழில் சில படங்கள் அவருக்கு கைகொடுக்கவில்லை என்றாலும், சிவகார்த்திகேயனுடன் இணைந்து அவர் நடித்த 'ரஜினிமுருகன்' திரைப்படம் அவரது திரை வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. 

குறிப்பாக இந்த படத்தில் இடம்பெற்ற "உன் மேல ஒரு கண்ணு" பாடலில் கீர்த்தி சுரேஷின் அழகான மற்றும் க்யூட்டான எக்ஸ்பிரெஷன்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. அந்தப் பாடலின் மூலம் ரசிகர்களின் கவனம் முழுமையாக கீர்த்தி சுரேஷ் மீது திரும்பியது. 'ரஜினிமுருகன்' திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, தமிழில் கீர்த்தி சுரேஷுக்கு வாய்ப்புகள் குவிந்தன. 

விஜய், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. விஜய்யுடன் 'பைரவா', 'சர்கார்', விக்ரமுடன் 'சாமி 2', தனுஷுடன் 'தொடரி', சிவகார்த்திகேயனுடன் 'ரெமோ', ரஜினிகாந்துடன் 'அண்ணாத்த' என முன்னணி நடிகர்களின் படங்களில் வரிசையாக நடித்தார். இவ்வாறு தொடர்ச்சியாக பல படங்களில் நடித்து நல்ல நடிகை என்ற பெயரை அவர் பெற்றாலும், அவர் எதிர்பார்த்த பெரிய வெற்றி அவருக்கு கிடைக்கவில்லை என்று கூறலாம். 

சூழல் இப்படி இருக்க, தெலுங்கில் அவர் நடித்த 'மகாநடி' திரைப்படம் அவரது திரை வாழ்க்கையில் ஒரு மைல்கல்லாக அமைந்தது. சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவான இந்த படம், கீர்த்தி சுரேஷின் நடிப்பு திறமையை வெளிக்காட்டியது மட்டுமின்றி, அவருக்கு தேசிய விருதையும் பெற்றுத் தந்தது. 

இந்த திரைப்படம் இந்திய திரையுலகில் அவரது பெயரை உச்சத்திற்கு கொண்டு சென்றது. தேசிய விருது பெற்ற பிறகு, தமிழில் கீர்த்தி சுரேஷுக்கு வாய்ப்புகள் சற்று குறைந்தன. இந்நிலையில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்த 'மாமன்னன்' திரைப்படம் அவருக்கு ஒரு நல்ல 'ரீ-என்ட்ரி' படமாக அமைந்தது. 

அந்த படத்தில் அவருக்கு பெரிய கதாப்பாத்திரம் இல்லையென்றாலும், கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி தனது முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார். இதனைத் தொடர்ந்து அவர் நடித்த 'சைரன்' திரைப்படம் வணிக ரீதியாக தோல்வியைத் தழுவியது. அடுத்ததாக அவர் நடித்த 'ரகுதாத்தா', 'பேபி ஜான்' ஆகிய படங்களும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. 

திரைப்பட வாழ்க்கையில் பல்வேறு ஏற்ற இறக்கங்களை சந்தித்த கீர்த்தி சுரேஷ், தனது தனிப்பட்ட வாழ்க்கையில் சந்தோஷமான தருணங்களை அனுபவித்து வருகிறார். பத்து வருடங்களுக்கும் மேலாக ஆண்டனி தட்டில் என்பவரை காதலித்து வந்த கீர்த்தி சுரேஷ், கடந்த வருடம் பெற்றோர்களின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். 

கோவாவில் நடைபெற்ற இவர்களது திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. இந்த திருமணத்தில் திரையுலகைச் சேர்ந்த பல நட்சத்திரங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். திருமணத்திற்கு பிறகும் இருவரும் சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர். 

சமீபத்தில் கூட ஒரு பார்ட்டியில் இருவரும் கலந்துகொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின. திருமணத்திற்கு பிறகும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் முழு கவனம் செலுத்த இருப்பதாக தெரிகிறது. இந்நிலையில், சினிமாவில் மட்டுமல்லாமல் தற்போது சின்னத்திரையிலும் அவர் கால் பதித்துள்ளார். 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'ஸ்டார்ட் அப் சிங்கம்' என்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கீர்த்தி சுரேஷ் கலந்துகொள்ள இருக்கிறார். திருமணத்திற்குப் பிறகும் கீர்த்தி சுரேஷ் மிகவும் சுறுசுறுப்பாக இயங்குவதை பார்த்த ரசிகர்கள், "திருமணத்துக்கு பின் கீர்த்தி படு ஸ்பீடாக இருக்கிறாரே" என்று சமூக வலைத்தளங்களில் கமெண்ட் செய்து வருகின்றனர். 

சினிமா, சின்னத்திரை என இரண்டிலும் கீர்த்தி சுரேஷ் கலக்குவது அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்