நடிகை ஜோதிகா ட்விட்டர் பயன்படுத்த தெரியாமல் போனது நல்லதாக போச்சு, இல்லன்னா பெரிய பஞ்சாயத்துல மாட்டி இருப்பாங்க என்று சூர்யா ரசிகர்கள் புலம்பித் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
என்ன விஷயம் என்று விசாரித்தால், அடக்கடவுளே என சொல்ல வைக்கும் தகவல் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஷயம் என்னவென்றால், நடிகை ஜோதிகா சமீபகாலமாக உடல் எடை குறைத்து மீண்டும் தனது பழைய ஃபிட்டான தோற்றத்திற்கு வந்துள்ளார்.
அதுமட்டுமின்றி, விதவிதமான மாடர்ன் உடைகளை அணிந்து கொண்டு இளம் நடிகைகளுக்கு சவால் விடும் வகையில் போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.
சென்னையில் இருக்கும் வரை இப்படியான புகைப்படங்களை ஜோதிகா வெளியிட்டது கிடையாது. ஆனால் மும்பைக்கு குடிபெயர்ந்த பிறகு, உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இறங்கிய ஜோதிகா, தற்போது ஸ்லிம்மாக மாறி கவர்ச்சியான உடைகளில் போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். இதுவரைக்கும் எல்லாம் ஓகே தான்.
ஆனால், சமீபத்தில் ஜோதிகா வெளியிட்ட புகைப்படம் ஒன்று தான் இப்போது சர்ச்சையை கிளப்பி உள்ளது. அந்த புகைப்படத்திற்கு ரசிகர் ஒருவர், "சூர்யாவை விட விஜய் சூப்பர்" என்று கமெண்ட் செய்திருந்தார்.
இதற்கு நடிகை ஜோதிகா சற்றும் எதிர்பாராத விதமாக கண்ணீர் விட்டு சிரிக்கும் எமோஜியை பதிலாக அளித்துள்ளார். இதனை பார்த்த சூர்யா ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.
"என்னடா கூத்து இது?" என்று ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் புலம்ப ஆரம்பித்தனர். இந்த விவகாரம் காட்டுத்தீ போல இணையத்தில் பரவியது. விஷயம் விபரீதமாவதை உணர்ந்த ஜோதிகா, உடனடியாக அந்த கமெண்டை டெலிட் செய்து விட்டதாக கூறப்படுகிறது.
இருந்தாலும், சூர்யா ரசிகர்கள் டென்ஷன் ஆகிவிட்டனர். ஜோதிகா ட்விட்டரில் ஆக்டிவாக இல்லாதது நல்லதாக போச்சு, இல்லன்னா இது பெரிய பிரச்சனையாக வெடித்து இருக்கும் என்று சூர்யா ரசிகர்கள் தற்போது புலம்பி வருகின்றனர்.
விஜய் மற்றும் சூர்யா இருவரும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள், இவர்கள் இருவருக்கும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. இரு நடிகர்களின் ரசிகர்கள் மத்தியிலும் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் மோதல்கள் ஏற்படுவது வழக்கம்.
இந்த நிலையில், ஜோதிகாவே இப்படி ஒரு கமெண்ட்டுக்கு சிரித்து பதில் அளித்தது ரசிகர்களை கொந்தளிக்க வைத்துள்ளது.
ஒருவேளை ஜோதிகா வேண்டுமென்றே இதை செய்யவில்லை என்றாலும், அவரது இந்த செயல் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்பது நிதர்சனம்.
0 கருத்துகள்