நடிகரின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமலஹாசன் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார்.
அதில் பேசிய அவர் நடிகர் விஜயின் அரசியல் நகர்வை ஏளனம் செய்யும் விதமாக பேசியிருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.
அவர் கூறியதாவது, நான் 20 வருடத்திற்கு முன்பே அரசியலுக்கு வந்திருக்க வேண்டியவன். அப்படி வராதது தான் என்னுடைய முதல் தோல்வியாக நான் பார்க்கிறேன்.
ஒருவேளை 20 வருடத்திற்கு முன்பு நான் அரசியலுக்கு வந்திருந்தால் இன்று நான் பேசி இருக்க வேண்டிய இடம் வேறு மாதிரி இருந்திருக்கும்.
ஆனால், கடைசி ஒரு வாக்காளர் இருக்கும் வரை நம்முடைய பணி தொடரும் எனக்கு கூறினார். தொடர்ந்து பேசிய அவர் நடிகர் விஜயின் அரசியல் நகர்வை கேலி செய்யும் விதமாக ஒரு வார்த்தையை பதிவு செய்தார்.
அதாவது, ரசிகர்கள் வேறு.. வாக்காளர்கள் வேறு.. என்பது தான் என் அனுபவத்தில் நான் தெரிந்து கொண்டது என கமலஹாசன் தன்னுடைய கருத்தை பதிவு செய்திருக்கிறார்.
இதன் மூலம், முழுக்க முழுக்க தன்னுடைய ரசிகர்களின் பலத்தை நம்பி அரசியலுக்கு வந்திருக்கும் நடிகர் விஜய்யை தாக்கி பேசி இருக்கிறார் நடிகர் கமலஹாசன் என்று இணைய பக்கங்களில் நெட்டிசன்கள் பலரும் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
விஜய் ரசிகர்கள் மற்றும் தவெகா தொண்டர்கள் கமல்ஹாசன் இப்படி பேசியது அவருடைய இயலாமையை காட்டுகிறது எனவும் எந்த கட்சிக்கு எதிராக டிவியை எல்லாம் உடைத்து பிரச்சாரம் மேற்கொண்டாரோ தற்போது அதே கட்சியில் தன்னுடைய கட்சியை அடமானம் வைத்துவிட்டு நின்று கொண்டிருக்கிறார்.
இப்படி இருக்கும் பொழுது நடிகர் விஜயின் அரசியல் நகர்வை ஏளனம் செய்யும் விதமாக இவர் பேசுவது ஏற்படுவது அல்ல எனவும் கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.
இது குறித்து உங்கள் கருத்து என்ன என்பதை சிரமம் பார்க்காமல் கீழே உள்ள கமெண்ட் செக்சனில் பதிவு செய்யுங்கள். நம்முடைய வாசகர்கள் உங்களுடைய கருத்துக்களை தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள்.
0 கருத்துகள்