நடிகை அஞ்சலி, 2007 ஆம் ஆண்டு ராம் இயக்கத்தில் வெளிவந்த "கற்றது தமிழ்" திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார்.
முதல் படத்திலேயே தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். பின்னர், "அங்காடி தெரு" திரைப்படம் அவரது திரை வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.
"எங்கேயும் எப்போதும்", "கலகலப்பு" போன்ற படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து, தனது திறமையை நிரூபித்தார்.
ஆனால், ஒரு கட்டத்தில் திரைப்பட வாய்ப்புகள் குறையவே, சிறிது காலம் திரையுலகில் இருந்து விலகி இருந்தார்.
"சிங்கம் 2" திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி மீண்டும் தலை காட்டினார். மீண்டும் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கிய அஞ்சலி, "நாடோடிகள் 2" திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாததால், சற்று சோர்வடைந்தார்.
பின்னர், விக்னேஷ் சிவன் இயக்கிய "லவ் பண்ணா விட்டிரனும்" குறும்படம் மற்றும் "நிசப்தம்" வெப் தொடரில் நடித்தார்.
தற்போது, தெலுங்கில் ராம் சரண் நடிக்கும் "கேம் சேஞ்சர்" திரைப்படத்தில் நடித்து வருகிறார். நடிகர் ஜெய்யுடன் லிவிங் வாழ்க்கையில் இருந்த அஞ்சலி, ஒரு கட்டத்தில் அந்தக் காதலை முறித்துக் கொண்டார்.
நடிகர் பயில்வான் ரங்கநாதன் கூறிய தகவலின் படி, ஜெய்யின் அதிகப்படியான மது பழக்கத்தால் அஞ்சலி வருத்தமடைந்துள்ளார்.
இதனால் ஜெய்யை அழைத்து போதும்.. என்னால முடியல.. விட்டுடு.. குடிப்பழக்கத்தை விட்டு விடு என ஒரு நாள் இரவு விடிய விடிய கெஞ்சி கதறியுள்ளார்.
எவ்வளவோ சொல்லியும் ஜெய் கேட்காததால், வாழ்க்கையை கருத்தில் கொண்டு பிரிந்துள்ளார். தமிழில் வாய்ப்புகள் குறைந்ததால், தற்போது அஞ்சலி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இது, பறிபோன பட வாய்ப்புகளை மீட்டெடுக்கும் முயற்சியாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
0 கருத்துகள்