சென்னை: 80-களில் தமிழ் சினிமாவில் கொடி கட்டிப் பறந்த நடிகைகளில் முக்கியமானவர் ராதா. ரஜினிகாந்த், கமல்ஹாசன், கார்த்திக், விஜயகாந்த் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து ரசிகர்களை மகிழ்வித்தவர்.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு திரையுலகிலும் ராதா ஒரு கலக்கு கலக்கினார். பிரபல நடிகை அம்பிகாவின் சகோதரியான ராதா, தென்னிந்திய சினிமா ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தார்.
இந்நிலையில், ராதா குறித்து பிரபல பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் பேசியிருக்கும் சில தகவல்கள் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கேரள மண்ணில் பிறந்த ராதாவை, தமிழ் திரையுலகிற்கு 'அலைகள் ஓய்வதில்லை' படத்தின் மூலம் அறிமுகம் செய்தவர் இயக்குனர் பாரதிராஜா. நடிகை அம்பிகாவின் தங்கை ராதா, முதல் படத்திலேயே தனது அபார நடிப்புத் திறமையாலும், வசீகர அழகாலும் ரசிகர்களை கட்டிப்போட்டார்.
முதல் படத்திலேயே ராதாவிற்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் குவிந்தன. ராதாவும் கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொண்டு 80-களில் முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். சொல்லப்போனால், ராதா மற்றும் அம்பிகா சகோதரிகள் இருவரும் 80-களில் தமிழ் சினிமாவை ஆட்சி செய்தார்கள் என்பது மிகையல்ல.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் ராதா தனது வெற்றிக் கொடியை நாட்டினார். தெலுங்கு திரையுலகிலும் முன்னணி நடிகர்களுடன் ராதா தொடர்ந்து ஜோடி சேர்ந்து நடித்து தெலுங்கு ரசிகர்களையும் தன்வசப்படுத்தினார். தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வாய்ப்புகள் குறைந்த சமயத்தில், ராதா தொழிலதிபர் ராஜசேகரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார்.
ராதா - ராஜசேகர் தம்பதியினருக்கு கார்த்திகா மற்றும் துளசி என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். ராதா திரைத்துறையை விட்டு விலகினாலும் அவரது மகள்கள் சினிமாவுக்குள் நுழைந்தனர்.
ராதாவின் மூத்த மகள் கார்த்திகா, கே.வி.ஆனந்த் இயக்கிய 'கோ' திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். 'கோ' திரைப்படம் வெற்றி பெற்றாலும், கார்த்திகா நடித்த அடுத்தடுத்த படங்கள் சொல்லும் அளவிற்கு வெற்றி பெறவில்லை.
இதனால் கார்த்திகா திரையுலகில் இருந்து ஒதுங்கினார். ராதாவின் இளைய மகள் துளசி, இயக்குனர் மணிரத்னம் இயக்கிய 'கடல்' படத்தில் அறிமுகமானார். துளசியும் 'கடல்' திரைப்படத்திற்கு பிறகு வேறு எந்த படத்திலும் நடிக்கவில்லை.
ராதாவின் மூத்த மகள் கார்த்திகாவுக்கு சில வருடங்களுக்கு முன்பு பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் ராதா குறித்து பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பலரும் அறியாத சில தகவல்களை பகிர்ந்துள்ளார்.
ராதாவின் உண்மையான பெயர் உதய சந்திரிகா என்றும், பின்னர் ராதா என்று மாற்றிக் கொண்டார் என்றும் பாண்டியன் கூறினார். ராதாவை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க நினைத்த இயக்குனர் பாரதிராஜா, தனது உதவி இயக்குனரான சித்ரா லட்சுமணனை ராதாவிற்கு மேனேஜராக நியமித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
'அலைகள் ஓய்வதில்லை' படத்தில் கார்த்திக் மற்றும் ராதா இடையே இருந்த கெமிஸ்ட்ரி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த படத்திற்கு பிறகு கார்த்திக் மற்றும் ராதா இருவரும் இணைந்து பல படங்களில் நடித்தனர். ராதாவின் சினிமா வெற்றிக்கு அவரது சகோதரி அம்பிகாவும் ஒரு முக்கிய காரணம்.
கார்த்திக்கும், ராதாவும் இணைந்து நடித்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்து, இருவரும் ரகசியமாக திருமணம் செய்து கொள்ளவும் திட்டமிட்டதாக அப்போதைய சினிமா வட்டாரத்தில் ஒரு பேச்சு இருந்தது. ஆனால், ராதாவின் தாயார் அதற்கு சம்மதிக்கவில்லை.
ராதாவின் தாயார் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரபலமான பேச்சாளர் என்பது குறிப்பிடத்தக்கது. கார்த்திக்கு பிறகு ராதாவிற்கும், நடிகர் சிரஞ்சீவிக்கும் காதல் ஏற்பட்டது. ராதாவை யார் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது என்பதில் நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணாவுக்கும், நடிகர் சிரஞ்சீவிக்கும் இடையே கடும் சண்டைகள் கூட வந்ததாக கூறப்படுகின்றது.
இப்படி பல காதல் சர்ச்சைகளுக்கு பிறகு, ராதா 1991 ஆம் ஆண்டு ராஜசேகர் என்பவரை திருமணம் செய்து கொண்டு இல்லற வாழ்க்கையில் செட்டிலாகிவிட்டார்.
தற்போது ராஜசேகர் ஒரு பெரிய தொழிலதிபராக இருக்கிறார் என்று பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் அந்த பேட்டியில் ராதா குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார்.