தென்னிந்திய திரையுலகில் தனக்கென ஒரு முத்திரையை பதித்த நடிகை அஞ்சலி, ஆரம்பத்தில் பல இன்னல்களை சந்தித்ததாக மூத்த பத்திரிகையாளர் செய்யாறு ரவி தெரிவித்துள்ளார்.
நடிகை அஞ்சலி மட்டுமல்லாமல், 90களில் முன்னணி நடிகையாக திகழ்ந்த ஒருவரும் சித்தியின் கட்டுப்பாட்டில் இருந்ததாகவும், அவர்கள் எப்படி அந்த பிடியில் இருந்து மீண்டு வந்தார்கள் என்பது குறித்தும் அவர் பகிர்ந்துள்ளார்.
சமீபத்தில் Aagayam Tamil யூடியூப் சேனலுக்கு செய்யாறு ரவி அளித்த பேட்டியில், யாரும் எதிர்பாராத வகையில் நடிகை அஞ்சலி தனது முதல் படத்திலேயே சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதாக கூறினார்.
ஃபிலிம் இன்ஸ்டியூட் மாணவி போல சிங்கிள் டேக்கில் காட்சிகளை ஓகே செய்ததை கண்டு மொத்த படக்குழுவும் கைதட்டி பாராட்டியதாக தெரிவித்தார். அஞ்சலி மட்டுமல்ல, 90களில் முன்னணி நடிகையாக இருந்த ஒருவரும் சித்தியின் கட்டுப்பாட்டில் இருந்ததை செய்யாறு ரவி சுட்டிக்காட்டினார்.
கார்த்திக் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்த அந்த நடிகை, படப்பிடிப்பு தளத்திற்கு எப்போதும் சோகமாக வருவார் என்றும், வீடு திரும்பும் நேரம் நெருங்கினாலே மேலும் சோகமாகிவிடுவார் என்றும் அவர் விவரித்தார்.
ஒரு கட்டத்தில் அந்த நடிகை பிரபல சினிமா பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், தனது சித்தி தன்னை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகவும், அவருடைய அழுத்தத்தால்தான் தான் வாழ்ந்து வருவதாகவும் வெளிப்படையாக குற்றம்சாட்டினார். தான் வெளியில் சிரிப்பதெல்லாம் போலி என்றும், சித்தி தன்னை கட்டாயப்படுத்தி பல காரியங்களை செய்ய சொல்வதாகவும் அந்த நடிகை கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்த நடிகையின் சித்தி, உண்மையில் வளர்ப்பு தாய் என்பது குறிப்பிடத்தக்கது. மும்பையில் இருந்து அந்த நடிகையை சென்னைக்கு அழைத்து வந்த சித்தி, பின்னர் அவரை கட்டுப்பாட்டில் வைக்க முயற்சித்தார். ஆனால், நடிகை சித்தியின் பிடியில் இருந்து விடுபட்டு மும்பைக்கே சென்றுவிட்டார்.
தற்போது ஆந்திராவில் பிரபலமான ஒருவரை திருமணம் செய்து கொண்டு நிம்மதியாக வாழ்ந்து வருகிறார். இதே போன்ற சூழ்நிலையில் தான் நடிகை அஞ்சலியும் சிக்கியதாக செய்யாறு ரவி தெரிவித்தார். ஒரு கட்டம் வரை சித்தியின் கட்டுப்பாடுகள் தேவைப்பட்டாலும், வளர்ந்த பிறகு நடிகைகள் தங்களது படங்கள், கதை தேர்வு, கால்ஷீட் போன்றவற்றை தாங்களே முடிவு செய்ய விரும்புகிறார்கள்.
"நான் இல்லாமல் நீ வளர்ந்திருக்க முடியுமா?" என சித்தி கேட்க, அஞ்சலிக்கும் சித்திக்கும் இடையே மாறி மாறி குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனால் மனமுடைந்த அஞ்சலி ஒரு கட்டத்தில் சினிமாவை விட்டே ஓடிப்போனார். அவர் எங்கு இருக்கிறார் என்று யாருக்கும் தெரியாமல் போனது.
பின்னர் ஒரு தமிழ் திரைப்பட இயக்குனரின் கட்டுப்பாட்டில் அஞ்சலி இருப்பதாகவும், சித்தியையும் அஞ்சலியையும் அவர்தான் ஆட்டுவிப்பதாகவும் செய்திகள் பரவின. ஆனால் அந்த இயக்குனர் உடனடியாக விளக்கம் அளித்து ஒதுங்கிக் கொண்டார்.
சித்தியின் தொல்லை அஞ்சலிக்கு தொடர்ந்து இருந்துகொண்டே இருந்தது. சினிமாவே வேண்டாம் என்று ஆந்திராவுக்கு ஒதுங்கிய அஞ்சலிக்கு, தெலுங்கு திரையுலகின் "டெரர்" தயாரிப்பாளர் ஒருவர் நம்பிக்கை கொடுத்து நடிக்க வைத்தார். அஞ்சலியை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர்கள், அந்த தயாரிப்பாளரை கண்டதும் ஆந்திர எல்லையை மிதிக்கவே பயந்தனர்.
இந்த "டெரர்" தயாரிப்பாளர் அளித்த பாதுகாப்பிற்கு பிறகுதான், இயக்குநர் ராம் "பேரன்பு" படத்தில் அஞ்சலியை மீண்டும் நடிக்க அழைத்தார். இது அஞ்சலியின் திரையுலக வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது என்று செய்யாறு பாலு அந்த பேட்டியில் கூறினார்.
சித்தியின் பிடியில் சிக்கித் தவித்த அஞ்சலி, ஒரு "டெரர்" தயாரிப்பாளரின் உதவியால் மீண்டு வந்து தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை மீண்டும் பிடித்தது ஒரு திரைப்பட கதை போல அமைந்தது எனலாம்.
0 கருத்துகள்