லப்பர் பந்து என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகையாக உருவெடுத்திருக்கிறார் நடிகை சுவாசிகா.
தமிழில் ஏற்கனவே பல்வேறு திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார். என்றாலும், ரசிகர்கள் மத்தியில் இவருக்கு அறிமுகமே கிடைக்கவில்லை.
ஆனால், லப்பர் பந்து திரைப்படத்தில் கதாநாயகனுக்கு மாமியார் வேடத்தை ஏற்று இரண்டாவது ஹீரோவாக கெத்து என்ற கேரக்டரில் நடித்திருந்த அட்டகத்தி தினேஷின் மனைவி கதாபாத்திரத்தில் மிரட்டி இருந்தார் நடிகை
சுவாசிகா.
படத்தில் இவருடைய அறிமுக காட்சியை பார்த்து ரசிகர்கள்.. யாருடா இந்த பொண்ணு என்று தேட ஆரம்பித்தனர்.
அப்போதுதான் இவர் ஏற்கனவே பல தமிழ் திரைப்படங்களில் நடித்திருக்கிறார் என்ற உண்மையே ரசிகர்களுக்கு தெரிய வந்தது.
இந்நிலையில், தன்னுடைய நீண்ட நாள் காதலனை கரம் பிடித்த சுவாசிகா காதலனோடு தேனிலவு சென்றிருந்த புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பினார்.
உச்சகட்டமாக தீவு ஒன்றுக்கு சென்றிருந்த அவர் நீச்சல் உடையில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை அதிர வைத்தார்.
லப்பர் பந்து திரைப்படத்தில் குடும்ப குத்துவிளக்காக பார்த்த நடிகை சுவாசிகவா இது..? என்று வாயைப் பிளந்தனர் ரசிகர்கள்.
இது ஒரு பக்கம் இருக்க தற்போது லேட்டக்ஸ் என்ற ஒருவித லப்பரால் ஆன பேண்டை அணிந்து கொண்டு இந்த வாழ்க்கையே ஒரு பார்ட்டி தான் அந்தப் பாட்டிக்கு ஏற்றார் போல உடை அணிய வேண்டும் தானே என்று கேப்ஷன் வைத்திருக்கிறார் நடிகை சுவாசிகா.
0 கருத்துகள்