நடிகர் விஜய், “ஜனநாயகன்” திரைப்படமே தனது கடைசி படம் என அறிவித்து அரசியலுக்கு செல்ல இருப்பதால், திரையுலகிலிருந்து முழுமையாக விலக முடிவு செய்துள்ளார்.
இந்த செய்தி அவரது சினிமா ரசிகர்களுக்கு மிகுந்த வருத்தத்தை அளித்துள்ளது. ஒருபுறம் “ஜனநாயகன்” தான் விஜய்யின் கடைசி படம் என கூறப்பட்டாலும், தளபதி 70 திரைப்படம் குறித்தும் அவ்வப்போது தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.
இருப்பினும், தளபதி விஜய் தரப்பிலிருந்து இதுகுறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.
இந்நிலையில், பிரபல இயக்குனரான அஸ்வத் மாரிமுத்து, நடிகர் விஜய் மீண்டும் சினிமாவில் நடிக்க வந்தால், அவரை இயக்க தான் தயாராக இருப்பதாக மனம் திறந்து பேசியுள்ளார்.
இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முக்கிய இயக்குனர்களில் ஒருவர். அவர் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான “டிராகன்” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
சமீபத்திய பேட்டி ஒன்றில் அஸ்வத் மாரிமுத்து, தான் தீவிர தளபதி விஜய் ரசிகன் என்பதை வெளிப்படையாக கூறினார்.
மேலும், மற்றொரு பேட்டியில் பேசிய அஸ்வத் மாரிமுத்து, "விஜய் மீண்டும் சினிமாவில் நடிக்க வருவாரா..? அத சொல்லுங்க மொதல்ல.. அப்படி விஜய் மீண்டும் சினிமாவுக்கு வர முடிவு செய்தால், அவருக்கு கதை சொல்லி படம் பண்ணுவதற்கு நான் கண்டிப்பாக முதல் ஆளாக போய் நிற்பேன்" என்று தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.
அஸ்வத் மாரிமுத்துவின் இந்த கருத்து, விஜய் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜய் அரசியலில் முழு கவனம் செலுத்த முடிவு செய்திருந்தாலும், அவர் மீண்டும் திரைப்படங்களில் நடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு அவரது ரசிகர்கள் மத்தியில் இன்னும் இருந்து வருகிறது.
அஸ்வத் மாரிமுத்து போன்ற திறமையான இயக்குனர்கள் விஜய்யை இயக்க தயாராக இருப்பது, ஒருவேளை விஜய் மீண்டும் நடிக்க வந்தால், அது ரசிகர்களுக்கு மேலும் மகிழ்ச்சியை அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
0 கருத்துகள்