நடிகை சோனா சமீபத்திய பேட்டியில் காமெடி நடிகர் வடிவேலு குறித்து தன்னுடைய அனுபவத்தை பதிவு செய்திருக்கிறார்.
அவர் கூறியதாவது, குசேலன் படத்திற்குப் பிறகு வடிவேல் கூட எனக்கு 16 படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த 16 முறையும் நான் நடிக்க மறுத்து விட்டேன்.
கோடி ரூபாய் கொடுத்தாலும் அப்படி ஒரு ஆளுடன் நான் நடிக்க மாட்டேன் பிச்சை எடுத்து கூட சாப்பிடுவேன் தவிர வடிவேலு படத்தில் நடிக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டேன்.
வடிவேலு பத்தி பேசுற அளவுக்கு அவர் ஒர்த்தான ஆள் கிடையாது. நான் என்னமோ மிகைப்படுத்தி சொல்வது போல இருக்கும் அவர் கூட நடித்த நடிகைகளை அழைத்து பேட்டி எடுத்துப் பாருங்கள். அவரைப் பற்றி உண்மையான விஷயங்களை கூறுவார்கள்.
வடிவேலு உடன் நடித்த நடிகைகளை அழைத்து அவருடன் நடித்த அனுபவம் குறித்து உங்களுடைய பதில் என்ன என்று கேள்வி கேட்டுப் பாருங்கள். அப்போது தெரியும் வடிவேலுவின் லட்சணம்.
அவருடன் இனிமேல் நான் எந்த படத்திலும் நடிக்க மாட்டேன். அவரை நிறைய பேர் கழுவி ஊத்துவாங்க. ஆனால், கோடி ரூபாய் கொடுத்தாலும் நான் அவருடன் நடிப்பது மட்டுமல்ல அவரை திட்டுவதை கூட கேவலமாக நினைக்கிறேன் என பேசி இருக்கிறார் நடிகை சோனா.
இதனை கேட்ட ரசிகர்கள் அப்படி என்ன தான் நடந்துச்சுன்னு சொல்லுங்க.. எதுவும் சொல்லாமே இப்படி ப்ளாஸ்ட் பன்றீங்க என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
0 கருத்துகள்