சிவாஜியின் 18 ஆண்டு சாதனையை துவம்சம் செய்யும் Good Bad Ugly..! தமிழகத்தில் மட்டும் எத்தனை திரைகளில் ரிலீசாகிறது தெரியுமா..?


அஜித் நடிப்பில் "துணிவு" படத்திற்கு பிறகு அடுத்த படம் வெளியாக நீண்ட காலம் எடுத்துக்கொண்டதால் ரசிகர்கள் மிகுந்த ஏக்கத்தில் இருந்தனர். ஆனால், இந்த வருடம் தொடக்கத்தில் அவர்களுக்கு கொண்டாட்டம் அளிக்கும் விதமாக பிப்ரவரி மாதம் "விடாமுயற்சி" திரைப்படம் வெளியானது. 

அதனைத் தொடர்ந்து அஜித் மிக வேகமாக நடித்து முடித்துள்ள திரைப்படம் "குட் பேட் அக்லி". இந்த படத்தில் அஜித் தனது தெறி லுக்கால் ரசிகர்களை அசத்தியுள்ளார். 

Advertisement

சமீபத்தில் இந்த படத்தின் சில வீடியோக்களை படக்குழு வெளியிட, அஜித் ரசிகர்கள் படம் மிகவும் சிறப்பாக இருக்கும் என்று நம்புகின்றனர். மேலும், முதல் நாளே படத்தை திரையரங்கில் பார்த்தே ஆக வேண்டும் என்ற ஆர்வத்தில் அவர்கள் உள்ளனர். 

இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. "புஷ்பா 2" படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற இந்த நிறுவனம், "குட் பேட் அக்லி" படத்தை 500 கோடி ரூபாய் வசூல் செய்யும் படங்களின் பட்டியலில் இணைத்து விட வேண்டும் என்ற இலக்குடன் திட்டமிட்டுள்ளது. 


 

இதற்காக தமிழகத்தில் மட்டும் 1350 திரையரங்குகளில் படத்தை வெளியிடவும், அஜித்தின் முந்தைய படங்களை விட உலகளவில் அதிக திரையரங்குகளில் வெளியிடவும் படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

"விடாமுயற்சி" படத்தின் வெளியீட்டிற்கு பிறகு, "குட் பேட் அக்லி" படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. அஜித் தனது மாஸ் நடிப்பால் மீண்டும் ஒருமுறை ரசிகர்களை கவர்வார் என்று நம்பப்படுகிறது. 

தயாரிப்பு நிறுவனத்தின் பிரம்மாண்ட திட்டங்கள் மற்றும் ரசிகர்களின் எதிர்பார்ப்பு ஆகியவற்றை வைத்து பார்க்கும்போது, "குட் பேட் அக்லி" திரைப்படம் அஜித் திரை வாழ்க்கையில் ஒரு முக்கிய படமாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.

மேலும், கடந்த 2007-ம் ஆண்டு சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான சிவாஜி திரைப்படம் 1300+ திரைகளில் வெளியானது. அதன் பிறகு, கிட்டத்தட்ட 18 ஆண்டுகள் கழித்து தற்போது குட் பேட் அக்லி திரைப்படம் 1350 திரைகளில் வெளியாகி சாதனை படைக்க உள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்