மூக்குத்தி அம்மன் 2 படத்திலிருந்து வெளியேறிய மீனா, ரெஜினா..? இது தான் காரணமா..? விளாசும் ரசிகர்கள்..!


நடிகரும் இயக்குனமான ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் வெளியான மூக்குத்தி அம்மன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. 

போலீசாமியார்கள் குறித்தும் அவர்களுடைய ஏமாற்று வேலை குறித்தும் அவர்களுக்கு பின்னால் இருக்கக்கூடிய அரசியல் குறித்தும் எளிமையான முறையில் பேசி இருந்தது மூக்குத்தி அம்மன் திரைப்படம்.

Advertisement

இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குனர் சுந்தர் சி இயக்குகிறார். நடிகை நயன்தாரா நடிக்கிறார். இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக நடிகை மீனாவும் நடிகை ரெஜினா கசாண்ராவும் ஒப்பந்தம் செய்யப்பட்டார்கள். 

தற்போது இந்த படத்தில் இருந்து அவர்கள் வெளியேறி இருக்கிறார்கள் என்ற தகவல்கள் சமூக வலைத்தள பக்கங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது. 

ஆனால், இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. இவர்கள் படத்தில் ஒப்பந்தம் ஆகிவிட்டு படப்பிடிப்பு ஆரம்பிக்கும் முன்பே எதற்காக படத்திலிருந்து விலக வேண்டும் என்பது குறித்த விவாதங்கள் சமூக வலைதள பக்கங்களில் எழுந்திருக்கின்றது.

அதன்படி மூக்குத்தி அம்மன் படத்தின் பூஜையில் நடிகை மீனாவை அவமதித்தார் நடிகை நயன்தாரா என்றும் தன்னுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டதால் நடிகை ரெஜினா மீதும் கோபப்பட்டார் நடிகை நயன்தாரா என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

நயன்தாரா அப்படி நடந்து கொள்வதற்கு என்ன காரணம்..? என்று விசாரித்த போது மூக்குத்தி அம்மன் பட பூஜையில் நான் மட்டும்தான் இருப்பேன் எனக்காக மட்டும்தான் இந்த படத்தின் பூஜை போடப்படுகிறது என்று நினைத்திருக்கிறார் நடிகை நயன்தாரா. 

ஆனால், அந்த மேடையில் நடிகை மீனா, நடிகை ரெஜினா ஆகியோர் இடம் பெற்றிருந்தது நடிகை நயன்தாராவிற்கு ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது. நான் தான் இந்த படத்தின் ஹீரோயின் நான்தான் மூக்குத்தி அம்மன். ஆனால் இங்கே அனைவரும் வந்திருக்கிறார்கள். இங்கே எனக்கு என்ன வேலை. பத்தோடு பதினொன்றாக நிற்பது போன்ற நிலைக்கு ஆளாக்கி விட்டார்களே என்ற ஏமாற்றத்தில் இருந்து இருக்கிறார் நடிகை நயன்தாரா.

ஒட்டுமொத்த படக்குழுவும் ஒட்டுமொத்த பூஜையும் ஒட்டுமொத்த கேமராவின் கண்களும் தன்னை நோக்கியே இருக்கும் என்ற நம்பிக்கையில் வந்த நயன்தாராவுக்கு இன்னும் சில நடிகைகள் மேடையில் இருந்தது ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது. அதுதான் அவருடைய முக சுழிப்புக்கு காரணமாகவும் அமைந்திருக்கிறது. 

இன்றைக்கு சினிமா எங்கேயோ சென்று கொண்டிருக்கிறது. இந்த காலகட்டத்தில் எனக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்று நடிகை நயன்தாரா செய்து கொண்டிருப்பதெல்லாம் சரியாக இல்லை. 

விடாமுயற்சி திரைப்படத்தில் நடிகர் அஜித் தனக்கு நிகரான ஸ்கிரீன் ஸ்பேசை வில்லனாக நடித்திருந்த நடிகர் ஆரவ் மற்றும் அர்ஜுனுக்கு கொடுத்து அழகு பார்த்திருக்கிறார்.

நடிகர் விஜய் கோட் படத்தில் துப்பாக்கிய புடிங்க சிவா என்று இன்னொரு நடிகரின் கையில் தன்னுடைய பொறுப்பை ஒப்படைத்தது போல கொடுத்துவிட்டு செல்கிறார். 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரைப்படத்தில் பல்வேறு முன்னணி நடிகர்கள் சூப்பர் ஸ்டாரை விட மாஸான காட்சிகளில் நடிக்கிறார்கள். இப்படி தமிழ் சினிமாவே அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து கொண்டிருக்கும் பொழுது நடிகை நயன்தாரா இப்படி பிற்போக்குத்தனமாக யோசித்துக் கொண்டு அவ்வளவு லட்சங்களை செலவு செய்து ஒரு பூஜை நிகழ்ச்சியை விரும்பத்தகாத ஒரு நிகழ்வாக பார்த்து முகம் சுளித்து இருப்பது வேடிக்கையாக இருக்கிறது.

நடிகை நயன்தாரா தனிப்பட்ட முறையில் பல்வேறு போராட்டங்களை சந்தித்திருக்கிறார். அதிலிருந்து மீண்டு வந்திருக்கிறார் என்பதெல்லாம் இரண்டாவது கதை.

ஒரு படத்தின் தயாரிப்பாளர் அந்த படத்தில் நடிக்கக்கூடிய நடிகைகள் நடிகர்களை அழைத்து படத்திற்கு பூஜை போடுகிறார். அங்கே நான் தான் முன்னிலைப்படுத்த வேண்டும் இவர்களெல்லாம் எதற்கு வந்தார்கள் என்ற மனநிலை நடிகர் நயன்தாராவிற்கு இருக்கக் கூடாது. அது தவறானது என்று கடுமையாக விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். 

இதன் காரணமாகவே நடிகை மீனாவும் ரெஜினாவும் படத்தில் இருந்து விலகி இருக்கிறார்கள் என்ற தகவலும் என்றும் இணைய பக்கங்களில் ரசிகர்களால் விவாதிக்கப்பட்டு வருகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்