அண்ணாமலை சொன்னது உண்மை தான் போலயே..? 2026 தேர்தல் குறித்து வெங்கட் பிரபு.. ரசிர்கள் ஷாக்..!

நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை சந்திக்கவும், முதலமைச்சர் ஆகவும் தீவிரமாக முனைப்பு காட்டி வருகிறார். 

இதற்காக அவர் தீவிரமாக கட்சிப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், விஜய் யாருடன் கூட்டணி அமைப்பார், அவரது தலைமையில் கூட்டணி இருக்குமா அல்லது வேறு கட்சியின் தலைமையில் அவர் கூட்டணிக்கு செல்வாரா என்ற விவாதங்கள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன. 

இதற்கிடையில், நேற்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் விஜயின் தமிழக வெற்றி கழகம் குறித்து ஒரு பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்தார். 

"திமுக உருவாக்கியுள்ள ரகசிய திட்டம் தான் விஜயின் தமிழக வெற்றி கழகம். திமுகவுக்கு எதிராக உள்ள வாக்குகளை வேறு கட்சிகளுக்கு செல்ல விடாமல் நடிகர் விஜய் அறுவடை செய்யும் விதமாக தமிழக வெற்றி கழகம் என்ற ரகசிய திட்டத்தை திமுக உருவாக்கி இருக்கிறது. இதை நான் சும்மா சொல்லவில்லை. தமிழக வெற்றி கழகத்தின் நடவடிக்கைகள், அதன் நகர்வுகளை நுட்பமாக ஆராய்ந்து சொல்கிறேன். ஆணித்தரமாக சொல்கிறேன் நடிகர் விஜய் திமுகவின் B டீம்" என்று அவர் கூறியது அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. 

மறுபுறம், விஜயின் கடைசி படமான 'தி கோட்' (The GOAT) படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு சமீபத்திய பேட்டி ஒன்றில் 2026 ஆம் ஆண்டுக்கு பிறகு GOAT vs OG படத்தின் அப்டேட்டை கண்டிப்பாக கொடுப்பேன் எனக் கூறியிருக்கிறார். 

நடிகர் விஜய் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராகும் எண்ணத்தில் இருக்கும் நிலையில், அவரது கடைசி படத்தின் இயக்குனரே 2026-ல் அடுத்த படத்தின் அப்டேட்டை தருவதாக கூறியிருப்பது ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

இதனை கேட்ட விஜய் ரசிகர்கள் விவேக் ஒரு காட்சியில் ஷாக் ஆவது போல "என்னடி சொல்ற.." என்று ஆச்சரியமும் குழப்பமுமாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். 

விஜய்யின் அரசியல் பயணம் 2026 தேர்தலை நோக்கியுள்ளதா அல்லது அவர் தொடர்ந்து நடிப்பாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. 

ஒருவேளை விஜய் தேர்தலில் வெற்றி பெற்றாலும், வெங்கட் பிரபுவின் அடுத்த படம் உருவாகுமா என்ற சந்தேகமும் நிலவுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம், விஜய்யின் அரசியல் மற்றும் சினிமா எதிர்காலம் எப்படி அமையப்போகிறது என்று.