விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் "சிறகடிக்க ஆசை" ( Siragadikka Aasai ) சீரியல் விறுவிறுப்பான கதைக்களத்துடன் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
இந்நிலையில், வரும் வார எபிசோடுக்கான ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. அதில் மனோஜ் வெளியிட்டுள்ள ஒரு அதிர்ச்சியான தகவல் அனைவரையும் உலுக்கியுள்ளது.
ப்ரோமோவில், முத்து தனது நண்பனையும், அவனது மனைவியையும் வீட்டிற்கு விருந்துக்கு அழைக்கிறார். அப்போது அங்கு வரும் மனோஜ், "கண்டவனுக்காக நான் காத்து இருந்து சாப்பிட முடியாது" என்று கூறி முத்துவின் நண்பனையும், அவரது மனைவியையும் அவமானப்படுத்துகிறான்.
இதனால் கோபமடைந்த முத்து மனோஜிடம் கடுமையாக பேசுகிறார். இந்த வாக்குவாதத்தின் போது, மனோஜ் முத்துவை பார்த்து "நீ ஜெயிலுக்கு போயிட்டு வந்தவன் தான" என்று கூறுகிறான்.
இதைக்கேட்ட மீனா அதிர்ச்சியில் உறைந்து போகிறார். பின்னர், மீனா முத்துவிடம் "ஏன் உங்களை பார்த்து அப்படி சொல்லணும்?" என்று கேட்கிறார். பல நாட்களாக முத்து மறைத்து வந்த ரகசியம் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக வெளிவரத் தொடங்கியுள்ளது.
அந்த உண்மை என்னவாக இருக்கும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். மேலும், முத்துவின் கடந்த காலத்தை பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில், "முத்துவின் ஃப்ளாஷ்பேக்கை போடுங்கள், அதையாவது பார்க்கலாம்" என்றும் "இதுக்கு தான் வெயிட் பண்ணிட்டு இருந்தோம்.." என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மனோஜின் இந்த திடீர் குண்டு ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முத்து ஏன் ஜெயிலுக்கு சென்றார்? அந்த ரகசியம் மீனா மற்றும் குடும்பத்தினரை எப்படி பாதிக்கப்போகிறது? என்ற பல கேள்விகளுடன் ரசிகர்கள் அடுத்த வார எபிசோடுக்காக காத்திருக்கின்றனர்.
"சிறகடிக்க ஆசை" சீரியலில் இந்த புதிய திருப்பம் மேலும் சுவாரஸ்யத்தை கூட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
0 கருத்துகள்