நடிகை ராஷ்மிகா மந்தனா சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் கலந்து கொண்டார். இந்த பேட்டியின்போது நடந்த ஒரு கலகலப்பான உரையாடல் தற்போது ரசிகர்கள் மத்தியில் பேசு பொருளாகியுள்ளது.
பேட்டியின்போது தொகுப்பாளர், விஜய் தேவரகொண்டாவிடம், "நீண்ட நாட்களாக நீங்கள் எந்த படத்தில் ராஷ்மிகா மந்தனாவுடன் நடிக்கவில்லையே, என்ன காரணம்?" என்று கேள்வி எழுப்பினார்.
அப்போது விஜய் தேவரகொண்டா பதில் சொல்ல முற்பட்டபோது, குறுக்கிட்ட ராஷ்மிகா மந்தனா, "இவர் என்னை வெறும் பொழுதுபோக்காக மட்டும் தான் பயன்படுத்துகிறான். மறுபடியும் சொல்கிறேன், இவர் என்னை வெறும் பொழுதுபோக்குக்காக மட்டுமே பயன்படுத்துகிறான். இவர் நிறைய படங்கள் நடிக்கட்டும், நிறைய பெரிய பெரிய படங்கள் நடிக்கட்டும், பெரிய பெரிய உச்சங்களுக்கு போகட்டும். அதற்காக நான் காத்திருக்க போவதில்லை. இனிமேல் இதே தேவரகொண்டா கேட்டாலும் அவருடைய படங்களில் நான் நடிக்க போகவில்லை" என்று சிரித்துக்கொண்டே கூறினார்.
இதற்கு பதிலளித்த விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகாவை பார்த்து சிரித்துக்கொண்டே, "அப்படியா? இனிமே நீ கேட்டாலும் நான் உன் படங்களில் நடிக்க மாட்டேன்" என்று பதிலுக்கு மிரட்டினார். இந்த கலகலப்பான பதில்கள் பேட்டியில் சிரிப்பலைகளை ஏற்படுத்தியது.
இருப்பினும், இந்த பேட்டிக்கு பின்னால் ஒருவேளை இருவருக்கும் இடையே ஏதேனும் மனக்கசப்புகள் இருக்கலாமோ என்ற சந்தேகத்தை ரசிகர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.
ராஷ்மிகா பேசிய வார்த்தைகளில் உள்ள அழுத்தத்தை வைத்து பார்க்கும்போது, இவர்கள் இருவரும் பிரேக்அப் செய்துவிட்டார்கள் போல் தெரிகிறது என்றும், நல்ல வேலை ரக்ஷித் ஷெட்டி காப்பாற்றப்பட்டார் என்றும் ரசிகர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இருவரும் இதற்கு முன்பு கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் போன்ற படங்களில் இணைந்து நடித்து ரசிகர்களை கவர்ந்தனர்.
இவர்கள் இருவரும் காதலித்து வருவதாகவும் கிசுகிசுக்கள் வந்த நிலையில், தற்போது ராஷ்மிகாவின் இந்த கலகலப்பான பதில்கள் பல யூகங்களை கிளப்பியுள்ளது. எது எப்படியோ, இந்த பேட்டி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது\