கஸ்தூரியை பிரபல அரசியல் புள்ளியுடன் தொடர்பு படுத்தி பேசும் பிரபல நடிகை.. காட்டு தீயாய் பரவும் ஆடியோ..!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை ஒருவர் பாலியல் புகார் அளித்த வழக்கு விவகாரம் மீண்டும் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. 

Advertisement

இந்நிலையில் நடிகை சமீபத்திய பேட்டி ஒன்றில், சீமான் மற்றும் அவருக்கு ஆதரவாக பேசிய கஸ்தூரி உள்ளிட்டோரை கடுமையாக விமர்சித்து ஆவேசமாக பேசியுள்ளார். 

பிரபல நடிகை ஒருவர், சீமான் மீது பாலியல் புகார் அளித்ததும், அதனை தொடர்ந்து 7 முறை கருக்கலைப்பு செய்ததாக கூறியதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சீமான் தன்னை காதலித்து, திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்து ஏமாற்றியதாக நடிகை குற்றம் சாட்டினார். 

இது தொடர்பாக நடிகை சில வீடியோ ஆதாரங்களையும் வெளியிட்டார். இந்த வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என சீமான் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், காவல்துறையினர் சீமானுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில், நடிகை சமீபத்தில் பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பல பகீர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். "நான் சீமான் மீது குற்றச்சாட்டை கூறியபோது நாம் தமிழர் கட்சியினர், நடிகை கஸ்தூரி உட்பட பலரும் என்னை கொச்சையாக விமர்சித்தனர். 

இப்போது என்னிடம் இருக்கும் லிங்கை (Link) பார்க்கும்போது நடிகை கஸ்தூரியை நான் கொச்சை கொச்சையாக திருப்பிக் கேட்கவா? கஸ்தூரிக்கும் சீமானுக்கு தொடர்பு உள்ளது என சொல்லவா..? இல்ல, நாங்க ரெண்டு பேரும் படுக்கும் போது கஸ்தூரி விளக்கு புடிச்சாளா..? 'விருப்பப்பட்டு வந்தேன், விருப்பப்பட்டு வந்தேன்' எனக் கூறினால் நான் என்ன விபச்சாரியா? நான் விருப்பப்பட்டு போனேன் என சீமான் தான் சொல்லிக்கொண்டு உள்ளார். 

ஆனால் நான் எந்த இடத்திலும் கூறவில்லை," என நடிகை ஆவேசமாக பேசியுள்ளார். "இன்றைக்கு தனது குழந்தைகள் குறித்து பேசும் சீமான், அன்றைக்கு என் அக்கா வழக்கிற்காக போய் நின்றபோது அதைச் செய்து கொடுக்க முடியவில்லை. 

எனது முதல் புகாரில், நான் ஏமாந்ததைப்போல் எந்த பெண்ணும் ஏமாறக்கூடாது என குறிப்பிட்டுள்ளேன். நான் உயிருடன் இருப்பது என்பது இந்த யுத்தத்தை நடத்த கடவுள் எனக்கு போட்ட பிச்சை. வீரப்பன் மகள் உட்பட பலரும் அழுகிறார்கள். 

ஆனால் நாங்கள் 14 ஆண்டுகளாக அழுது கொண்டு உள்ளோம். எனது அம்மா இறந்தே விட்டார். அக்கா படுத்த படுக்கையாக உள்ளார்," என கண்ணீர் மல்க நடிகை பேசியுள்ளார். "போலீஸ் விசாரணையில் உண்மையை ஒப்புக் கொள்கிறார். 

சீமான் சாமானியனாக இருந்திருந்தால் எனக்கு என்றைக்கோ நீதி கிடைத்திருக்கும். அதிமுக உள்ளிட்ட பல கட்சிகளின் போர்வைக்குள் போய் ஒளிந்து கொண்ட சீமானுக்கு அசிங்கமாக இல்லையா? சீமானை விட நான் பச்சை பச்சையா கேட்பேன். 

எனக்கு என்ன இனி உள்ளது? எல்லாம் இழந்து விட்டேன். எனக்கு எதற்காக ரூபாய் 50 ஆயிரம் கொடுத்தாய், நான் கொடுத்த பணத்தை திருப்பிக் கொடுத்திருக்கிறாய். நான் என்ன பிச்சக்காரியாகவா சீமானிடம் வந்தேன்?" என நடிகை ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார். 

மேலும் நடிகை கூறுகையில், "காவல்துறை விசாரணைக்குப் பின்னர் எப்படி ஒத்துக் கொள்கிறார்? இப்போது சீமானுக்கு ஆதரவாக இருப்பவர்கள், நானும் சீமானும் குடும்பம் நடத்தும் போது எங்கே சென்றார்கள்? பாதிக்கப்பட்ட எனக்கு நியாயம் கிடைக்க வேண்டும், என ஒரு மனமாக நினைக்க வேண்டும். இனி சீமானை காப்பாற்ற யார் வந்து நின்றாலும் கடுமையாக விமர்சிக்கப்படுவார்கள். 

14 ஆண்டுகளாக ஒரு பெண்ணின் கண்ணீர். கருக்கலைப்புகளால் எனது கர்ப்பப்பையை நீக்க வேண்டிய நிலையில் இன்றைக்கு நான் உள்ளேன்," என வேதனையுடன் தெரிவித்துள்ளார். "ஆனாலும் நான் போராடிக் கொண்டு உள்ளேன். 

நான் நினைத்தால் சீமானுடன் சமரசமாக போய்விட முடியும், ஆனாலும் நான் போராடுவது தமிழ்நாடு மக்களுக்கு இதில் தெளிவாக தெரிய வேண்டும். சீமானைப் போன்றவர்கள் தலைவர்களாக ஆகக் கூடாது என்பதற்காக போராடிக்கொண்டு உள்ளேன்," என நடிகை திட்டவட்டமாக கூறியுள்ளார். 

நடிகையின் இந்த ஆவேசமான குரல் பதிவு தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இதற்கு சீமான் தரப்பிலிருந்து என்ன பதில் வரப்போகிறது என பலரும் எதிர்பார்த்து காத்து கொண்டு இருக்கின்றனர். மேலும் இந்த வழக்கு விசாரணை எந்த திசையில் செல்லும் என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்