தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக ஒரு காலத்தில் திகழ்ந்தவர் லட்சுமி மேனன். ஆரம்பத்தில் பல வெற்றி படங்களில் நடித்த அவர், இடையில் சில தோல்வி படங்களால் மார்க்கெட் இழந்தார்.
இதனால் நடிப்பிற்கு தற்காலிகமாக விடை கொடுத்து தனது படிப்பை கவனிக்க சொந்த ஊருக்கு சென்றார்.
ஆனால் அவர் திரும்பி வருவதற்குள் தமிழ் சினிமாவில் பல புதிய இளம் நடிகைகள் வரவால் அவரது இடத்தை இழக்க நேரிட்டது. பட வாய்ப்புகள் குறைந்ததால் மீண்டும் தனது சொந்த ஊருக்கே சென்று செட்டில் ஆனார் லட்சுமி மேனன்.
இந்நிலையில், நடிகை லட்சுமி மேனன் நடிகர் விஷாலை திருமணம் செய்து கொள்ளப்போவதாக சில வருடங்களுக்கு முன்பு இணையத்தில் தகவல் பரவியது.
ஆனால் இரு தரப்புமே இதனை திட்டவட்டமாக மறுத்தனர். இதற்கிடையே பிரபல இயக்குனர் லிங்குசாமி ஒரு பேட்டியில் நடிகை கீர்த்தி சுரேஷே நடிகர் விஷாலுக்கு பெண் கேட்டு சென்றதாகவும், ஆனால் கீர்த்தி சுரேஷ் ஏற்கனவே ஒருவரை காதலிப்பதால் விஷாலின் திருமண கோரிக்கையை நிராகரித்து விட்டதாகவும் கூறி பரபரப்பை கிளப்பினார்.
தற்போது, நடிகை லட்சுமி மேனன் திருமணம் குறித்த புதிய தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, நடிகை லட்சுமி மேனனுக்கும் நடிகர் விஷாலுக்கும் இடையே மீண்டும் திருமண பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
இரு வீட்டாரும் மீண்டும் திருமண பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், இது குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிகை லட்சுமி மேனன் மீண்டும் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுக்க முயற்சித்து வரும் நிலையில், நடிகர் விஷாலுடனான இந்த புதிய திருமண தகவல் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இருவரும் மீண்டும் இணைய போகிறார்களா? இல்லை இதுவும் வெறும் வதந்தியா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
0 கருத்துகள்