நடிகை நஸ்ரியா குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமாவில் மிகப்பெரிய பிரபலம் பெற்றவர் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான நேரம் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார் நடிகை நஸ்ரியா.
அதனை தொடர்ந்து ராஜா ராணி,திருமணம் என்னும் நிக்கா, நையாண்டி என அடுத்தடுத்து முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார்.
தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகவும் விருப்பமான நடிகையாக சிம்மாசனம் போட்டு அமர்ந்த நடிகை நஸ்ரியா திடீரென இயக்குனர் ஃபகத் பாசிலை திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிப்பதிலிருந்து ஒதுங்கினார். தற்போது மீண்டும் அடிக்க ஆரம்பித்திருக்கிறார்.
இடையில் நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் வெளியான நையாண்டி திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார் நடிகை நஸ்ரியா இந்த படம் வெளியான பிறகு தன்னுடைய அதிர்ச்சியை புகாராக கொடுத்து ஒட்டுமொத்த திரையுலகையும் அதிர வைத்தார்.
அவர் கூறிய புகார் என்னவென்றால் நையாண்டி திரைப்படத்தில் நான் கவர்ச்சியாக நடிக்கவில்லை. குறிப்பாக, டூப் நடிகையின் தொப்புளை என்னுடைய தொப்புள் போல காட்டி ட்ரிக் செய்திருக்கிறார் இயக்குனர் என பரபரப்பு புகார் கூறியிருந்தார்.
இது மிகப்பெரிய அதிர்வலைகளை கிளப்பியது. தொடர்ந்து பேசிய அவர் தமிழ் சினிமாவில் நடிக்க போவதில்லை என்று பதிவு செய்திருந்தார். அதேபோல இதுவரை எந்த தமிழ் சினிமாவில் நடிக்கவில்லை. இவர் நடித்த படங்கள் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாகின்றன அவ்வளவுதான்.
இப்படி தமிழ் சினிமாவில் என் தொப்புளை காட்டிட்டாங்க என்று ஒப்பாரி வைத்த நடிகை நஸ்ரியா தற்போது வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
இந்த வெப்சிரிசை அவருடைய கணவர் பகத் பாஸில் தான் தயாரிக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. பிரேமலு படத்தில் நடித்த படக்குழுவைக் கொண்டு பிரேமலு படத்தில் இரண்டாம் பாகத்தை வெப் சீரிஸ் வடிவத்தில் வெளியிடலாம் என்று திட்டமிட்டு இருக்கிறார்கள் என்றும் இந்த வெப்செரிஸில் நடிகை நஸ்ரியாவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் என்றும் தகவல் வெளியாகி இருக்கின்றது.
0 கருத்துகள்