நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் தனது சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று அவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போடா போடி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமான வரலக்ஷ்மி, தொடர்ந்து பல்வேறு படங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
தாரை தப்பட்டை, விக்ரம் வேதா, மாரி 2 போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்த அவர், சர்கார் மற்றும் சண்டக்கோழி 2 ஆகிய படங்களில் வில்லியாக மிரட்டலான நடிப்பை வழங்கி தனக்கென ஒரு தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார்.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு திரையுலகிலும் முன்னணி நடிகையாக வலம் வரும் வரலக்ஷ்மி நடிப்பில் இந்த ஆண்டு வெளியான மதகஜராஜா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு தொழிலதிபர் நிகோலாய் என்பவரை திருமணம் செய்து கொண்ட வரலக்ஷ்மி, திருமணத்திற்குப் பிறகும் படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
மேலும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நடன நிகழ்ச்சி ஒன்றிலும் நடுவராக பங்கேற்று வருகிறார். இந்நிலையில், நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பக்கத்தில் கையில் கட்டுடன் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சியடைந்துள்ளனர். அந்த வீடியோவில், தான் தற்போது நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பின்போது சண்டைக் காட்சி ஒன்றில் ஈடுபட்டதாகவும், அப்போது தனது கட்டை விரலில் காயம் ஏற்பட்டுவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், தான் விரைவில் குணமடைந்து மீண்டும் படப்பிடிப்பில் இணைவேன் என்றும் வரலக்ஷ்மி அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார். வரலக்ஷ்மி சரத்குமார் காயம் அடைந்திருக்கும் இந்த செய்தி அவரது ரசிகர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
அவர் விரைவில் குணமடைந்து மீண்டும் தனது பணிகளை தொடர வேண்டும் என்று ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
0 கருத்துகள்