நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி பாலியல் ரீதியான பகீர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டதாகவும், அவரால் ஏழு முறை கருக்கலைப்புக்கு ஆளானதாகவும், நிர்வாண வீடியோவை வெளியிட்டு விடுவதாக மிரட்டியதாகவும் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
இந்த குற்றச்சாட்டுக்கள் தமிழக அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.
சமீபத்திய பேட்டி ஒன்றில் , தேன்மொழி என்பவருடன் சீமானுக்கு ஏற்கனவே நிச்சயதார்த்தம் நடந்த விஷயம் தனக்கு தெரிய வந்ததை பற்றி பேசிய விஜயலட்சுமி, " ஒரு நாள் தேன்மொழி இடமிருந்து எனக்கு ஒரு மெசேஜ் வந்தது.
அந்த தேன்மொழி யார் என்று விசாரிக்கும்போதுதான் தேன்மொழிக்கும் சீமானுக்கும் ஏற்கனவே நிச்சயதார்த்தம் ஆன விஷயம் எனக்கு தெரிந்தது. இது குறித்து நான் சீமானிடம் கேட்ட பிறகு தான் எனக்கும் அவருக்கும் பிரிவு ஏற்பட்டது.
அந்த தேன்மொழி என்ற பெண்ணும் நிறைய பணம், நகைகளை கொடுத்து ஏமாந்து இருக்கிறார். இந்த விஷயம் எனக்கு தெரிந்து கேட்டபோது, அது தேவை இல்லாத கதை அதை பற்றி எதுவும் கேட்காதே என்று சொல்லிவிட்டார். அதன்பின் கொஞ்சம் கொஞ்சமாக என்னிடம் பேசுவதை நிறுத்திவிட்டார்.
அப்போதுதான் சீமானின் ஆட்கள் சிலர் எனக்கு போன் செய்து இங்கே இருக்காதீர்கள், பெங்களூருக்கு சென்று விடுங்கள், அண்ணனின் வாழ்க்கை மாறப்போகுது.
இனிமே நீங்கள் இங்கே இருந்தால் நன்றாக இருக்காது என்று மிரட்டினார்கள். அதன் பிறகுதான் நான் கமிஷனர் அலுவலகத்தில் சீமான் மீது புகார் கொடுத்தேன்," என்று தெரிவித்தார்.
கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தது குறித்து அவர் கூறுகையில், "நான் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தபோது கூட அவருடன் சேர்ந்து வாழ வேண்டும் என்பதற்காகத்தான் புகார் கொடுத்தேன். ஆனால், நான் பணம் வாங்கிக் கொண்டதாக சொல்கிறார்கள்.
இதுக்கு தான் இதெல்லாம்..
நான் எப்போதும் பணம் கேட்டது இல்லை. அப்போதிலிருந்து இப்போது வரை அவர் ஏன் என்னை விட்டு சென்றார் என்று எனக்கு தெரியவே இல்லை. எப்போதும் கூட அவர் என்னுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசையாகவே இருக்கிறது இதுக்கு தான் இந்த போரட்டாமெல்லாம்.
ஆனால், அதற்கான காரணம் எனக்கு தெரியவில்லை. என் அம்மா கூட இறக்கும் நேரத்தில் இன்னொரு திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழு என்று சொன்னார்கள்.
ஆனால், என்னால் சீமானை என்றுமே மறக்கவே முடியாது. ஏனென்றால் நாங்கள் இருவரும் மிகவும் சந்தோஷமாக வாழ்ந்தோம். அன்று என்னுடன் வாழ்ந்த சீமான், எப்போதும் இல்லை, அவர் பணம், புகழ் எல்லாம் வந்துவிட்டதால் அவர் மொத்தமாக மாறி இருக்கிறார்," என்று ஏக்கத்துடன் பேசினார்.
பொட்டுத்துணியின்றி விஜயலட்சுமி..
புகாரை வாபஸ் பெற்றது குறித்து அவர் கூறுகையில், "அந்த புகாருக்கு பிறகாவது என்னை அவர் திருமணம் செய்து கொள்வார் என்று உறுதி அளித்ததால் நான் அந்த புகாரை வாபஸ் வாங்கிக் கொண்டேன். ஆனாலும் என்னை திருமணம் செய்து கொள்ளாமல் புறக்கணித்தார்.
தொடர்ந்து, பேசிய விஜயலட்சுமியின் பேச்சில் இருந்து அவர் நிர்வாணமாக இருக்கும் போது வீடியோ எடுத்து வைத்துள்ளார்கள் என்பது தெரிய வருகிறது.
தற்போது, இது குறித்து நடந்த விஷயங்களை கூறி அரசியல் வட்டாரத்தை அதிர வைத்துள்ளார் விஜயலட்சுமி.
பல இடங்களில் வைத்து..
அவர் கூறியதாவது, பல இடங்களில் வைத்து எனக்கு மிரட்டல்கள் வந்தன. அதாவது நான் உடம்பில் பொட்டுத்துணியின்றி நிர்வாணமாக வீடியோவை வெளியிடுவோம் என்றும் பலவிதமான மிரட்டல்கள் வந்தன.
இதனால் தான் நான் என்ன செய்வது என்று பயந்துவிட்டேன். அதன் பிறகுதான் துணிந்து முடிவு எடுத்து 14 வருடமாக போராடிக்கொண்டு இருக்கிறேன்.
எனக்கு என் கணவர் வேண்டும், அவருடன் நான் சேர்ந்து வாழ வேண்டும், சீமானின் மனைவி நான் தான் என்று அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் இத்தனை ஆண்டுகள் போராடினேன்," என்று தனது நீண்ட கால போராட்டத்திற்கான காரணத்தை விளக்கினார்.
கடைசியாக மிகுந்த மனவேதனையுடன் அவர் கூறுகையில், "ஆனால், இன்று அவர் என்னை ஒரு பாலியல் தொழிலாளி என்று பேசியிருக்கிறார். பாலியல் தொழிலாளியாக இருந்தால், அந்த வேலையை தான் நான் பார்த்துக் கொண்டு சென்று இருப்பேன்.
சீமான் தான் வேண்டும் என்று இவ்வளவு தூரம் நான் போராடிக் கொண்டு இருக்க மாட்டேன். இனிமேலும் சீமான் தான் வேண்டும் என்று நான் சொல்லிக்கொண்டே இருந்தால், அதில் அர்த்தமே இருக்காது. இந்த அளவுக்கு அவர் பேசிய பிறகும் மனதில் ஒரு வெறுப்பு தான் வந்து இருக்கிறது.
தற்போது சீமான் பேசுவதெல்லாம் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்பதற்காக பேசிக்கொண்டு இருக்கிறார். என்னையும் அவரும் பற்றி விஷயம் தெரிந்த பலரும் சீமானை காப்பாற்ற வேண்டும் என்று தான் பார்க்கிறார்கள்," என்று தனது வேதனையை வெளிப்படுத்தினார்.
நடிகை விஜயலட்சுமியின் இந்த பேட்டி, தமிழக அரசியல் களத்தில் புயலை கிளப்பியுள்ளது. 14 வருடங்களாக தொடர்ந்து சீமான் மீது அவர் முன்வைத்து வரும் குற்றச்சாட்டுக்களுக்கு சீமான் தரப்பு என்ன பதில் அளிக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். இந்த விவகாரம் மேலும் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
0 கருத்துகள்