லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, தற்போது இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகும் "மூக்குத்தி அம்மன் 2" திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகும் இப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் சமீபத்தில் தொடங்கப்பட்ட நிலையில், தற்போது படத்தில் வில்லன் யார் என்பது குறித்த தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் 2020 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் "மூக்குத்தி அம்மன்". கொரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியானாலும், இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து, "மூக்குத்தி அம்மன் 2" திரைப்படம் உருவாகவுள்ளது. முதலில் "மூக்குத்தி அம்மன்" முதல் பாகத்தை இயக்கிய ஆர்.ஜே.பாலாஜியே இரண்டாம் பாகத்தையும் இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், சில காரணங்களால் இரண்டாம் பாகத்தை ஆர்.ஜே.பாலாஜி இயக்கவில்லை. இதையடுத்து, பிரபல இயக்குனர் சுந்தர்.சி "மூக்குத்தி அம்மன் 2" படத்தை இயக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
சுந்தர்.சி தனது பிரம்மாண்ட படங்களுக்கு பெயர் போனவர் என்பதால், இரண்டாம் பாகம் முதல் பாகத்தை விட மிகப்பெரிய அளவில் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். "மூக்குத்தி அம்மன் 2" திரைப்படம் சுமார் 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்தில் இப்படத்தின் பூஜை கூட கோவிலை போன்ற பிரம்மாண்ட செட் அமைத்து, அன்னதானம் மற்றும் கோவில் சார்ந்த சிறப்பு விஷயங்களுடன் கோலாகலமாக நடைபெற்றது.
இந்நிலையில், படத்தில் யார் வில்லனாக நடிக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், தற்போது வில்லன் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. "மூக்குத்தி அம்மன் 2" திரைப்படத்தில் பிரபல முன்னணி ஹீரோ நடிகர் ஒருவர் வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.
ஒரு காலத்தில் நயன்தாராவுக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு பெற்ற அந்த நடிகர், தற்போது அவருக்கு வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அவர் வேறு யாருமில்லை, நடிகர் அருண் விஜய் தான்! "என்னை அறிந்தால்" திரைப்படத்தில் வில்லனாக நடித்து திரையுலகில் தனது செகண்ட் இன்னிங்ஸை தொடங்கிய அருண் விஜய், தற்போது முன்னணி நடிகராக கலக்கி வருகிறார். அருண் விஜய்தான் "மூக்குத்தி அம்மன் 2" படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் வில்லனாக நடிக்கவுள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.
மேலும், அருண் விஜய் தற்போது நடிகர் தனுஷ் இயக்கி நடிக்கும் "இட்லி கடை" திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தனுஷுக்கும், நயன்தாராவுக்கும் சுமூகமான உறவு இல்லாத நிலையில், அருண் விஜய் இருவரின் படங்களிலும் கமிட் ஆகி நடிப்பது ரசிகர்களிடையே பேசு பொருளாக மாறியுள்ளது.
அருண் விஜய் "மூக்குத்தி அம்மன் 2" படத்தில் வில்லனாக நடிப்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், நடிகை நயன்தாரா, நீங்க எனக்கு வில்லனாவிங்கன்னு கனவுல கூட நினைச்சு பாக்கல என அருண்விஜயிடம் கோபமாக கூறியதாக ஒரு தகவல் கசிந்துள்ளது.
0 கருத்துகள்