பலருக்கும் தெரியாத பாரதிராஜா மகன் மனோஜின் இறப்புக்கான உண்மை காரணம்


சினிமாவில் தொடர்ச்சியாக படங்களில் நடிப்பதால் ஏற்படும் உடல்நலக்குறைபாடுகள் ஒருபுறம் இருக்க, வாய்ப்புகள் இல்லாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்து மதுவுக்கு அடிமையாவதாலும் உடல்நலக்குறைபாடு ஏற்படுகிறது. 

மேலும், வெளியில் பிரபலமாக இருந்தாலும் பலருக்கு வீட்டில் பேசக்கூட ஆள் இல்லாமல் மதுவே துணையாக இருக்கும் நிலைதான் சினிமா மரணங்கள் அதிகரிக்க காரணம் என்று சினிமா விமர்சகர் வலைப்பேச்சு பிஸ்மி தெரிவித்துள்ளார். 

சமீபத்தில் Media Circle என்ற யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் வலைப்பேச்சு பிஸ்மி கூறியதாவது, "சில மாதங்களுக்கு முன்பு மருத்துவமனையில் மனோஜை சந்தித்தேன். அப்போது அவர் நிறைய எதிர்கால திட்டங்களை என்னிடம் கூறினார். 

ஆனால் இப்போது அவர் அகால மரணமடைந்துவிட்டார். அவருக்கு ஆஞ்சியோகிராம் செய்ததாகவோ அல்லது ஓபன் ஹார்ட் சர்ஜரி செய்ததாகவோ இருவேறு தகவல்கள் வருகின்றன. ஆனால் அவர் இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்தார் என்பது உண்மை. 

சினிமா துறையில் உடல்நிலை பாதிக்கப்பட பல காரணங்கள் உள்ளன. அதிக வேலை, ஓய்வு இல்லாமல் பணிபுரிவது போன்றவற்றால் உடலை கவனிக்க நேரம் கிடைப்பதில்லை. அதேசமயம் சினிமாக்காரர்கள் வீடுகளில் உணவு உபசரிப்பு அதிகமாக இருப்பதால் கட்டுப்பாடு இல்லாமல் சாப்பிடுகிறார்கள். 

ஒருபக்கம் உழைத்து களைப்பது, மறுபக்கம் ருசியான உணவுகளை அதிகமாக சாப்பிடுவது என எல்லாமே சேர்ந்து உடல்நிலையை பாதிக்கிறது. சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும் என்பதால் சினிமாக்காரர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். 

சினிமாக்காரர்கள் பகட்டாக வாழ்கிறார்கள் என்று வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு தோன்றலாம். ஆனால் பலருக்கு சோகமான பக்கங்கள் உள்ளன. ஆரம்பத்தில் புகழ், பணம், வசதி என கொண்டாட்ட மனநிலையில் பலர் குடித்து குடிநோயாளியாக மாறுகிறார்கள். 

ஒரே நேரத்தில் பல படங்களில் நடிப்பது உடல்நலத்தை கெடுப்பது போல, வாய்ப்பு இல்லாமல் வீட்டில் இருப்பவர்களுக்கு வாழ்க்கையை நகர்த்துவதே சிரமமாக இருக்கும். இதனால்தான் மதுவுக்கு அடிமையாகும் பழக்கம் வருகிறது. சிலருக்கு வீட்டில் பேசக்கூட ஆள் இருக்க மாட்டார்கள். 

அவர்களுக்கு மதுதான் ஒரே துணை. இதெல்லாம்தான் சினிமா மரணங்கள் அதிகரிக்க காரணம். மனோஜ் பாரதிராஜாவை பொறுத்தவரை அவர் நடிகர் மட்டுமல்ல, பாரதிராஜாவின் மகனும் கூட. அவருக்கு தோல்வி கிடைத்தால் அது அவரை இரட்டிப்பாக பாதிக்கும். 

அது பாரதிராஜாவின் பெயரையும் பாதிக்கும். காரணம் இருவரையும் ஒப்பிட்டு பார்ப்பார்கள். இதுவும் மனோஜுக்கு வலியை தந்திருக்கும். இந்த வலியை அவர் யாரிடமும் பகிர்ந்து கொள்ள முடியாது. 

இப்படியான அழுத்தங்களை மனதுக்குள் வைத்திருந்ததும் மனோஜ் இறப்புக்கு காரணமாக இருக்கலாம்" என்று அவர் தெரிவித்தார்.