கடந்த சில நாட்களாக இணையத்தில் தமிழ் சீரியல் நடிகைகளின் அந்தரங்க வீடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருவது நாம் அறிந்ததே.
ஆடிஷன் என்ற பெயரில் வாய்ப்பு தருவதாக கூறி, நடிகைகள் மோசமாக நடத்தப்படுவதும், அவர்கள் கேமராவின் முன் தங்கள் உடலை காட்டவும், அருவருப்பான கட்டளைகளுக்கு கீழ்ப்படியவும் நிர்பந்திக்கப்படுவதை இந்த வீடியோக்கள் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.
நேற்று வரை வெளியான இரண்டு வீடியோக்களிலும் ஒரு ஆணின் குரல் நடிகைகளுக்கு கட்டளைகளை இட்டு அவர்களை வற்புறுத்தியது. ஆனால், தற்போது வெளியாகியுள்ள மூன்றாவது வீடியோவில் ஒரு பெண்மணியின் குரல் நடிகைகளுக்கு மோசமான கட்டளைகளை பிறப்பித்து அவர்களை அவ்வாறு செய்ய சொல்கிறது.
இது ரசிகர்களை மேலும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சினிமா வாய்ப்புக்காக ஆண் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் அல்லது ஏஜென்ட்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்று ஒருவேளை யூகிக்க முடிந்தாலும், ஒரு பெண்மணியே சக நடிகைகளை இப்படி செய்ய சொல்லி வீடியோ பதிவு செய்வது வியப்பளிக்கிறது.
அந்த நடிகையும் ஒரு பெண் தானே என்ற எந்தவிதமான கூச்சமும் இல்லாமல், அவர் வக்கிரமான கட்டளைகளை சீரியல் நடிகைகளுக்கு இடச்சொல்கிறார். தொடர்ந்து இதுபோன்ற வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வருவது இணையவாசிகள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவங்கள் திரையுலகில் நிலவும் இருண்ட பக்கத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுவதுடன், இது போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.