சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை சாய் பல்லவி தன்னுடைய வாழ்க்கை நகர்வுகள் குறித்து அனுபவங்களை கூறியதன் மூலம் சமகாலத்தில் இருக்கக்கூடிய இளைஞர்களுக்கு சில முக்கியமான விஷயங்களை கூறியிருக்கிறார்.
அதன்படி அவர் கூறியதாவது, நாம் எல்லோருமே நிறைய மக்களை பார்த்து வளர்க்கிறோம். அதுவும் குறிப்பாக, யாருக்கெல்லாம் வாட்டசாட்டமான உடம்பு, அழகான முகம், இருக்கிறதோ அவர்கள் எல்லாம் பார்ப்பதற்கு ஹீரோ போல இருக்கிறார்கள் பார்ப்பதற்கு ஹீரோயின் போல் இருக்கிறார்கள் என்று நடிகர் நடிகைகளுடன் ஒப்பிட்டு பார்க்கக்கூடிய இயல்பு நம்மிடம் இருக்கிறது.
சினிமாவில் ஹீரோயினாக நடிக்கக் கூடியவர்களுக்கு கச்சிதமான உடல்வாகு அழகு என அனைத்துமே இருக்கிறது. என்னை கேட்டால் தனிப்பட்ட முறையில் நடிகைகள் சிம்ரன், திரிஷா இவர்கள் இருவருக்கும் கச்சிதமான உடம்பு அழகு என சினிமா நடிகைகளுக்கு உரித்தான அனைத்து அம்சங்களும் அவர்களிடம் இருக்கும்.
அவர்களைப் பார்த்துதான் நான் வளர்ந்தேன்..நான் ஜார்ஜியாவில் மருத்துவ படித்துக் கொண்டிருந்தபோது அந்த நாட்டு மக்களுடன் என்னை பொருத்தி பார்த்திருக்கிறேன்.. அவர்கள் எல்லோரும் மிக அழகாக இருப்பார்கள்.. அவர்கள் முகத்தில் பருக்கள் இருக்காது.. ஆனால் நான் ஏன் இப்படி இருக்கிறேன் என் முகமெல்லாம் பருவாக இருக்கிறது.. என்று நினைத்து நான் ஏங்கி இருக்கிறேன்.
நான் நடிகையாக வேண்டும் என்று நான் நினைத்தது கிடையாது. ஆனால், ஒரு சாதாரண மனுசியாக எனக்குள் ஒரு பாதுகாப்பற்ற ஒரு உணர்வு எனக்குள் இருந்தது.
நாம் ஏன் இப்படி இருக்கிறோம்.. என்றெல்லாம் நான் யோசித்து இருக்கிறேன்.. ஆனால், ஒரு கட்டத்தில் தான் இப்படியான உணவுகள் எல்லாம் தேவையற்றது. நாம் எப்படி இருக்கிறோமோ.. நம்முடைய அழகு எப்படி இருக்கிறதோ அதுதான் நாம்.. இன்னொருவர் நம்மை விட அழகாக இருக்கிறார் என்பதை பார்த்து நாம் நம்மை தாழ்த்திக் கொள்ள தேவையில்லை.. என்ற விஷயங்களை உணர்ந்து கொண்டேன் என பேசி இருக்கிறார் நடிகை சாய் பல்லவி.
இவருடைய இந்த கருத்து பற்றி உங்களுடைய பார்வையை கமெண்ட் செக்ஷனில் பதிவு செய்யுங்கள்.
0 கருத்துகள்