தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அவர்கள் சமீபத்தில் ஒரு மேடையில் பேசும்போது பேசிய விஷயம் ரசிகர்களை முகம் சுளிக்க வைத்திருக்கிறது.
அவர் பேசியதாவது, தளபதியை பார்ப்பதற்கு எத்தனையோ கோடீஸ்வரர்கள், தொழிலதிபர்கள், மிகப்பெரிய தயாரிப்பாளர்கள் எல்லாம் நேரம் கேட்கிறார்கள். தளபதி யாருக்கும் நேரம் கொடுப்பதில்லை.
ஆனால், தன்னுடைய ரசிகன் என்றால் ஒரு மணி நேரம் அமர வைத்து அவரிடம் பேசக்கூடிய ஒரு நபர், மாவட்ட செயலாளர்களை தேர்வு செய்யும் போது தன்னுடைய ரசிகர்களை அமர வைத்து ஒரு மணி நேரம் ஒவ்வொருவரிடமும் தனியாக ஒரு மணி நேரம் பேசினார்.
இப்படி ஒவ்வொரு மீட்டிங்கின் போதும் தளபதிக்கு டம்ளர் வாங்கி வைப்பேன். மீட்டிங் முடித்துவிட்டு பார்த்தால் அந்த டம்ளர் இருக்காது. எங்கே என்று பார்த்தால் அந்த டம்ளரை ரசிகர் அபேஸ் செய்து கொண்டு போய் இருப்பார்.
என் தளபதி தன்னுடைய கையால் தொட்டு பயன்படுத்திய டம்ளர் என்று எடுத்து சென்று விடுகிறார்கள். இதனால் ஒவ்வொரு முறையும் புதிய டம்ளர் வாங்க வேண்டியதாக இருக்கிறது.
அப்படி உயிராக உணர்வாக தளபதியை நேசிக்கிறார்கள். எங்களுக்கு தெரிந்ததெல்லாம் தளபதி மட்டும் தான் தளபதியை தவிர வேறு எதுவும் தெரியாது என்று மேடையில் பேசியிருக்கிறார்.
இந்த பேச்சுக்களை தனிப்பட்ட முறையில் அவர்கள் ரசிகர்களுடன் பேசிக் கொள்வது என்பது வேறு.. ஆனால், ஒரு பொது மேடையில் இப்படி பேசுவது அருவருப்பாக இருக்கிறது ஜீரணிக்க முடியாத அளவுக்கு இருக்கிறது. இப்படியே புஸ்ஸி ஆனந்த் பேசிக் கொண்டிருந்தால் தவெகவுக்கு முதல் வில்லனே இவராகத்தான் இருப்பார் போல் தெரிகிறது.
பொதுவெளியில் என்ன விஷயத்தை பேச வேண்டும் என்ன விஷயத்தை பேசக்கூடாது என்பதை தெரிந்து கொண்டு நடந்து கொள்ள வேண்டும் என்று பொதுவான ரசிகர்கள் தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
இது குறித்து உங்களுடைய பார்வை என்ன என்பதை பதிவு செய்யுங்கள்.