தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் தென்னிந்திய சினிமாவில் ஒரு ரவுண்டு வர வேண்டும் என்ற நினைப்பில் தன்னுடைய சினிமா பயணத்தை தொடங்கிய ஆசிட் நடிகைக்கு சொல்லிக் கொள்ளும்படி வெற்றி படம் எதுவும் அமையவில்லை.
ஒரே ஒரு திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்து இருந்தாலும் அதில் இன்னும் நிறைய ஹீரோயின்கள் இருந்ததால் ஹீரோயினுக்கான வாய்ப்பு இவருக்கு கிடைக்காமல் போய்விட்டது.
சமீபத்தில், தன்னுடைய காதலனை திருமணம் செய்து கொண்டார் அம்மணி. திருமணம் முடிந்த கையோடு ஹனிமூன் சென்ற இவர் அப்செட்டாகி திரும்பி இருக்கிறார்.
சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த படத்தில் முக்கியமான கதாபாத்திரம் என்று கூறி கிட்டத்தட்ட 20 நாட்கள் படப்பிடிப்பு நடத்தி இருக்கிறார்கள். கூடவே ஒரு பாடலுக்கு கவர்ச்சி ஆட்டமும் போட்டு இருக்கிறார் அம்மணி.
ஆனால் படத்தில் இவர் நடித்த காட்சிகள் அனைத்தையும் வெட்டி வீசிவிட்டு இவர் நடித்த ஐட்டம் பாடலை மட்டும் இணைத்து வெளியிட்டிருந்தார்கள். இதனால், மேலும் அப்செட் ஆகி இருக்கிறார் அம்மணி.
ஒரே ஒரு பாடலுக்கு ஐட்டம் நடிகையாக ஆட வேண்டும் என கேட்டு இருந்தால் நான் மறுத்திருப்பேன். ஆனால், படத்தில் முக்கியமான கதாபாத்திரம் என்று சொல்லி படப்பிடிப்பையும் நடத்தி கடைசியில் ஒரே ஒரு பாடலை மட்டும் இணைத்து வெளியிட்டு இருக்கிறார்கள் என்று ஏமாற்றத்தை பதிவு செய்திருந்தார்.
இந்நிலையில், காதல் கணவனுடன் ஹனிமூன் சென்ற மணி அப்செட் ஆகி திரும்பி இருக்கிறார், என்ன காரணம் என்றால்.. தன்னுடைய தோழிகளிடம் அங்கு சென்று கணவருடன் ரொமான்டிக் ரீல்ஸ் வீடியோக்களை எடுத்து பதிவிடுகிறேன் பார்த்து என்ஜாய் செய்யுங்கள் என்று கூறி சென்று இருக்கிறார்.
ஆனால், அம்மணியின் காதல் கணவருக்கு ரிலீஸ் வீடியோக்களில் எதிர்பார்த்த முகபாவனை கிடைக்கவில்லை. இவர் சொன்னது அனைத்திற்கும் எதிராக நடந்ததால் நடிகை கொஞ்சம் அப்செட்டில் திரும்பினாராம்.
இதனால் தன்னுடைய ஹனிமூன் வீடியோக்களையும் புகைப்படங்களையும் அதிகம் பகிராமல் தன்னுடைய கிளாமரான புகைப்படங்களை மட்டும் வெளியிட்டு வந்தார்.
இந்த காலத்தில் கல்யாணம், கல்யாணத்திற்கு முன்பு போட்டோ சூட், கல்யாணத்திற்கு பின்பு போட்டோ சூட், கல்யாணத்தின் போது போட்டோ சூட் என மணமக்கள் விதவிதமாக போட்டோ சூட்டை எடுத்து கலக்கிக் கொண்டிருக்கும் கலாச்சாரத்திற்கு நடுவே இந்த நடிகை இப்படி ஒரு உதாரணமாக மாறி இருக்கிறார்.
0 கருத்துகள்