"என்னோட இந்த உறுப்பை.. கூட இருந்தவனே அதை செஞ்சான்.." பிக்பாஸ் அபிராமி கூறிய அதிர்ச்சி தகவல்..!

பிரபல நடிகை பிக்பாஸ் அபிராமி சமீபத்திய பேட்டி ஒன்றில் பெண்கள் இணைய பக்கங்களில் சந்திக்கும் பாடி ஷேமிங் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். ரசிகர்கள் அவரை பாடி ஷேமிங் செய்து கமெண்ட் செய்வது குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, அவர் தனது கசப்பான அனுபவத்தை பகிர்ந்துகொண்டார். 

அபிராமி கூறுகையில், "பாடி ஷேமிங் என்பது எல்லோருக்கும் நடக்கும். ஒல்லியாக இருந்தால் 'அவளிடம் ஒண்ணுமே இல்லை' என்று கமெண்ட் செய்வார்கள். 

குண்டாக இருந்தால் மோசமாக வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்வார்கள். அவ்வளவு ஏன், என்னுடைய மார்பு, பின்னழகு என ஒவ்வொரு உறுப்பையும் குறிப்பிட்டு மோசமாக கமெண்ட் செய்திருக்கிறார்கள். அப்படி கமெண்ட் செய்பவர்கள் யாரோ புதிய நபர்கள் என்றால் பிரச்சனை இல்லை. 

அப்படி கமெண்ட் செய்யும்போது 'இது யாரோ ஒருவர் பேசுகிறார், நமக்கு என்ன' என்று கடந்து சென்றுவிடலாம். ஆனால் என் உடன் இருந்த ஒருவர் போலியான ஒரு கணக்கை தொடங்கி என்னுடைய உடம்பில் ஒவ்வொரு உறுப்பாக வர்ணித்து கமெண்ட் செய்து வைத்திருந்தார். 

இது என்னுடைய நண்பர்கள் சிலர் மூலமாக எனக்கு தெரிய வந்த பிறகுதான் தெரியவந்தது. அப்போது நான் மிகவும் உடைந்து விட்டேன். யாரோ ஒருவர் நமக்கு யார் என்றே தெரியாத ஒருவர் கமெண்ட் செய்யும் போது அதை பற்றி நாம் பெரிதாக கொள்ள மாட்டோம். 

ஆனால் நம் உடலில் இருந்து கொண்டு போலியான ஒரு கணக்கை தொடங்கி மோசமாக இப்படி எழுதி இருக்கிறார் என்று நினைக்கும் போது எனக்கு கண்ணீர் வந்துவிட்டது" என்று வேதனையுடன் தெரிவித்தார். நடிகை அபிராமி வெங்கடாச்சலத்தின் இந்த பேட்டியை கேட்ட ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

தங்களுக்கு தெரிந்தவர்கள் இப்படி நடந்து கொண்டார்களா என்று அவர்கள் வருத்தமும் அதிர்ச்சியும் அடைந்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். திரையுலகில் இருப்பவர்களுக்கே இதுபோன்ற கொடுமைகள் நடப்பது வேதனை அளிப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

அபிராமியின் இந்த தைரியமான வெளிப்படைத்தன்மைக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.