சமூக வலைதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு பல லட்சம் ரூபாய் சம்பாதித்து வருகிறார் "பலூன் அக்கா" என அழைக்கப்படும் அரோரா சின்கிளேர்.
பிக் பாஸ் போட்டியாளராக இருந்த மீரா மிதுன் ஆரம்பத்தில் இதே பாணியை பின்பற்றி கிம் கர்தாஷியன் ரேஞ்சுக்கு தன்னை முன்னிறுத்திக் கொண்டார். ஆனால், சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டு தற்போது காணாமல் போய்விட்டார்.
இந்நிலையில், சமீப காலமாக சமூக வலைதளங்களை தனது கவர்ச்சியால் ஆட்சி செய்து வருபவர் இந்த பலூன் அக்கா தான்.
தெலுங்கானாவில் சூதாட்ட செயலிகளுக்கு துணை போன இன்ஃப்ளூயன்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில், தமிழ்நாட்டிலும் இது போன்றவர்களை கவனிக்க வேண்டும் என்ற கருத்துக்கள் நிலவி வருகின்றன.
கோலிவுட்டின் பூனம் பாண்டே:
ரசிகர்களால் பலூன் அக்கா என அழைக்கப்படும் அரோரா சின்கிளேர், இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் போன்ற தளங்களில் எல்லை மீறிய கவர்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார். யாஷிகா ஆனந்த், தர்ஷா குப்தா, மீரா மிதுன் போன்ற பிக் பாஸ் பிரபலங்களையே பின்னுக்கு தள்ளிவிட்டு, கோலிவுட்டின் பூனம் பாண்டே போல மாறிவிட்டார்.
பாலாபிஷேகம் முதல் டாப்லெஸ் வரை:
பலூன் அக்கா தனது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மூலம் கிரண் காசு சம்பாதிப்பதை விட அதிகமாக வருமானம் ஈட்டி வருகிறார் என்று கூறப்படுகிறது. சமீபத்தில் அவர் ஒரு ஸ்பாவில் தனக்கு பாலாபிஷேகம் செய்யும் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இளைஞர்களை கிறங்கடித்தார்.
அதையும் தாண்டி, டாப்லெஸ்ஸாக எடுத்த ஒரு புகைப்படத்தையும் அவர் பகிர்ந்து இணையத்தை அதிர வைத்துள்ளார். நெட்டிசன்கள் அவரை "என்னம்மா இப்படியெல்லாம் இறங்கீட்டீங்களே" என்று கலாய்த்து வந்தாலும், இளைஞர்கள் மத்தியில் இவரைப் போன்ற கவர்ச்சி காட்டும் அக்காவிற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.
"காற்றுள்ள போதே தூற்றிக்கொள்" என்ற பழமொழிக்கு ஏற்ப, பலூன் அக்கா தனது கவர்ச்சியை மூலதனமாக வைத்து கல்லா கட்டி வருகிறார். இவரது இந்த அதீத கவர்ச்சி பயணம் எங்கு போய் முடியும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். ஆனால், தற்போது சமூக வலைதளங்களில் இவருக்கென ஒரு பெரிய ரசிகர் பட்டாளம் இருப்பது நிதர்சனம்.