என்னோட இந்த உறுப்பை பார்த்து ரசிகர்கள் என்ஜாய் பன்றாங்க.. அதனால.. விக்ரம் வேதா ஹீரோயின் ஓப்பன் டாக்..!

பிரபல நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் சமீபத்திய பேட்டி ஒன்றில் சினிமா குறித்து வெளிப்படையாக பல்வேறு விஷயங்களை பதிவு செய்து இருக்கிறார். 

Advertisement

அவர் கூறியதாவது, சினிமாவில் கவர்ச்சியாக நடிப்பது அல்லது கவர்ச்சி காட்டாமல் நடிப்பது இதெல்லாம் ஒரு விஷயமே கிடையாது. ஏனென்றால், கவர்ச்சியான நடிகைகளை ரசிப்பதற்கு என ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது, அதேபோல குடும்பப்பாங்கான நடிகைகளை ரசிப்பதற்கு எனவும் ஒரு ரசிகர் பட்டாளம் இருக்கிறது. 

சினிமாவை பொருத்தவரை ஹீரோயினோ கதையோ அல்லது தயாரிப்பாளர்கள் இது எதுவுமே விஷயமே கிடையாது. சினிமா என்பது ரசிகர்கள் தான். ரசிகர்களை அடிப்படையாக.. அவர்களை அஸ்திவாரமாகக் கொண்டது தான் சினிமா. 

அப்படி இருக்கும் பொழுது ரசிகர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் அவர்களுக்கு என்ன தேவை என்பதை சினிமா துறையினர் கொடுக்க வேண்டும். ரசிகர்கள் நடிகர்களிடம் கவர்ச்சியை எதிர்பார்க்கிறார்கள் அதை கொடுக்க வேண்டும் அதை விட்டுவிட்டு நான் அதை செய்ய மாட்டேன் இதை செய்ய மாட்டேன் என்று சொல்லுவது அவரவருடைய தனிப்பட்ட விருப்பம். 

அதில் நாம் தலையிட முடியாது. ஆனால், சினிமா என்றால் ரசிகர்கள் தான் என்று புரிந்து கொள்ள புரிந்து கொண்ட யாருமே சினிமாவிற்காக எதையும் செய்ய தயாராக இருப்பார்கள் என பேசினார். 

தொடர்ந்து பேசிய அவர், ஒரு முறை நேரலையில் பேசிக் கொண்டிருக்கும் பொழுது வரக்கூடிய கமெண்ட்களை நான் படித்தேன். அவர்கள் என்னிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டேன். 

உடனே என்னுடைய தலைமுடியை முடிந்து கொண்டை போடுவது போல என்னுடைய அக்குளின் அழகு அவர்களுக்கு தெரிவதை உறுதிப்படுத்தினேன். ஏனென்றால், என்னுடைய அக்குள் அழகை ரசிக்கக்கூடிய ரசிகர்கள் அதனை என்ஜாய் செய்வார்கள் என்பதால் தான். 

மட்டுமில்லாமல் அந்த வீடியோவிலேயே என்னுடைய அக்குள் அழகை ரசிக்கக்கூடிய ரசிகர்கள் என்ஜாய் செய்யுங்கள் என்று சொல்லிவிட்டு தான் அதனை நான் செய்தேன். 

ஒரு சினிமாவின் அடிப்படை எப்படி ரசிகர்கள் என்று கூறினேனோ அதேபோல ஒரு சினிமா பிரபலத்திற்கு மிக முக்கியமானது ரசிகர்கள் தான். அதை தவிர வேறு எதுவுமே கிடையாது. 

எந்த அளவுக்கு நமக்கு ரசிகர்கள் இருக்கிறார்களோ.. அந்த அளவுக்கு நமக்கான வாய்ப்புகளும்.. அவர்களை நாம் சென்றடைய கூடிய வழிகளும் அதிகரிக்கும்.. என பேசி இருக்கிறார் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத். இது குறித்து உங்களுடைய கருத்து என்ன என்பதை கமெண்ட் செக்ஷனில் பதிவு செய்யுங்கள்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்