பிரபல இயக்குனர் பாரதிராஜா அவர்களுடைய ஒரே மகனான மனோஜ் கே பாரதி ராஜா நேற்று மாரடைப்பு காரணமாக உயிரிழந்தது ரசிகர்களை மிகப்பெரிய அதிர்ச்சியில் ஆழ்த்தி இருந்தது.
இந்நிலையில், கடந்த ஒரு ஆண்டு காலமாக தனிமையில் வாடி வந்த மனோஜ் குறித்த உண்மை தகவல்கள் சில இணைய பக்கங்களில் வெளியாகி இருக்கிறது.
நடிகர் மனோஜ் தன்னுடன் சாதுரியன் என்ற படத்தில் ஜோடியாக நடித்த நடிகை நந்தனா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
தன்னால் நடிகராகவும் ஜெயிக்க முடியவில்லை இயக்குனராகவும் ஜெயிக்க முடியவில்லை என்ற வேதனையில் இருந்த நடிகர் மனோஜ்க்கு மிகப்பெரிய ஆறுதலாக இருந்தது அவருடைய காதல் மனைவி நந்தனா தான்.
நிலைமை இப்படி இருக்க கடந்த ஒரு ஆண்டு காலமாக உடல்நல பிரச்சனையால் பாதிக்கப்பட்டு சிரமப்பட்டு வந்திருக்கிறார் நடிகர் மனோஜ். இதனால் தன்னுடைய வழக்கமான அலுவலக வேலைகள் எதையும் செய்ய முடியாமல் தனிமையிலேயே இருந்திருக்கிறார்.
அந்த நேரத்தில் அந்த அனைத்து வேலைகளையும் அவருடைய மனைவி நந்தனாதான் முன்னின்று செய்திருக்கிறார். கவலைப்படாதே சீக்கிரம் உடம்பு சரியானதும் நான் எல்லா வேலையும் பாத்துக்குறேன் என ஆறுதல் கூறி வந்துள்ளார் நடிகர் மனோஜ்.
சமீபத்தில் இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்ட மனோஜ் கடந்த இரண்டு மாதங்களாக தீவிர மருத்துவ கண்காணிப்பில் இருந்திருக்கிறார் எப்படியாவது இந்த பிரச்சனையிலிருந்து இவர் மீண்டு வந்து விடுவார் என்று காத்துக் கொண்டிருந்த அவருடைய மனைவி வந்தனாவுக்கு ஏமாற்றமே மிஞ்சி இருக்கிறது.
தன்னுடைய மகள்களுக்கு சினிமா இயக்குவது பற்றி பல்வேறு விஷயங்களை கற்றுக் கொடுத்து வந்த மனோஜ் தன்னுடைய மூத்த மகளை எப்படியாவது இயக்குனர் ஆக்கிவிட வேண்டும் என்ற முயற்சியில் இருந்து இருக்கிறார்.
ஆனால் அவருடைய கனவு நிறைவேறாமலேயே போயிருக்கிறது. இந்த நேரத்தில் மனைவிக்கும் குடும்பத்தாருக்கும் தமிழகம் தளம் மற்றும் நம்முடைய வாசகர்கள் சார்பாக ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறோம்.