கேரள மாநிலத்திலேயே அம்பிகா மற்றும் ராதா குடும்பங்கள் மிகப்பெரிய தொழிலதிபர் குடும்பங்களாக திகழ்வதாக மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் தெரிவித்துள்ளார்.
நடிகை ராதாவின் தொழில் வளர்ச்சி மற்றும் அவரது குணாதிசயங்கள் குறித்து அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் விரிவாக பேசியுள்ளார்.
Benindcinema என்ற ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பாண்டியன் கூறுகையில், "திருவனந்தபுரத்திற்கு அருகில் உள்ள கல்லாறு என்பதுதான் ராதாவின் சொந்த கிராமம்.
அவரது தாயார் சரசம்மா மாவட்ட அளவில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பேச்சாளராக இருந்தார். ராதாவின் உண்மையான பெயர் உதய சந்திரிகா. இயக்குனர் பாரதிராஜாதான் இந்த பெயரை மாற்றினார்.
பாரதிராஜாவிடம் உதவியாளராக இருந்த சித்ரா லட்சுமணன்தான் ராதாவுக்கு கடைசிவரை மேனேஜராகவும், மக்கள் தொடர்பு அதிகாரியாகவும் இருந்தார். ராதா தனது கட்டுப்பாட்டிலேயே இருக்க வேண்டும், வெளியேறிவிடக் கூடாது என்பதற்காக பாரதிராஜா தனது உதவியாளரை அனுப்பி அவரை கவனித்துக் கொண்டார்" என்றார்.
"அலைகள் ஓய்வதில்லை" திரைப்படம் வெற்றி பெற்றதும் ராதாவுக்கு ஏராளமான வாய்ப்புகள் வந்தன. வெறும் 10 வருடங்களில் 100 படங்களில் நடித்து முடித்தார். அவரது தத்ரூபமான நடிப்பும், இயற்கையான முக அமைப்பும் தான் அவரை முன்னணி நடிகையாக 10 வருடங்கள் வைத்திருந்தது.
ராதாவின் தாயார் சரசம்மா, வெற்றி பெற்ற நடிகர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களுடன் எப்போதும் நெருக்கமாக இருந்தார். ராதா அடிக்கடி அரசியலில் ஜெயலலிதாவையும், சினிமாவில் ஸ்ரீபிரியாவையும் தனது ரோல் மாடல்களாக கூறுவார்.
ராதாவின் அக்கா அம்பிகா இல்லாவிட்டால் அவர் இந்த உயரத்தை எட்டியிருக்க முடியாது. அம்பிகாவை அவர் தனக்கு இன்னொரு அம்மா என்று பலமுறை நன்றியுடன் கூறியுள்ளார்.
காரணம், சினிமாவின் அந்தப்புரம், இந்தப்புரம் என அனைத்து நுணுக்கங்களை ராதாவுக்கு கற்றுக் கொடுத்ததே அம்பிகாதான். ராதாவின் வளர்ச்சிக்கு அம்பிகாவின் ஆலோசனைகள் முக்கிய காரணமாக அமைந்தன.
அந்த காலகட்டத்தில் சில கிசுகிசுக்களும் வந்தன. குறிப்பாக, நடிகர் கார்த்திக்குடன் ராதாவுக்கு காதல் ஏற்பட்டு, இருவரும் ஓடிப்போகப் போவதாக செய்திகள் வந்தன. உடனே ராதாவின் அம்மா சரசம்மா, "உன்னுடைய உயரம் தெரியாமல் இப்படி செய்கிறாயா?" என்று கண்டித்ததாகவும் சொல்வார்கள். பின்னர், தெலுங்கில் சிரஞ்சீவியுடன் காதல் என்று பேசப்பட்டது.
தெலுங்கு சினிமாவில் பாலைய்யாவுக்கும், சிரஞ்சிவிக்கும் ராதாவுக்காகவே போட்டி நிலவியது. ராதா நடித்தாலே அந்த படம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருந்தது.
1991 ஆம் ஆண்டு ராஜசேகர் என்ற நாயரை திருமணம் செய்து கொண்ட ராதா, பின்னர் மிகப்பெரிய தொழிலதிபராக மாறினார். தற்போது அவர் 5 நட்சத்திர ஹோட்டல்கள் மட்டுமே ஐந்து வைத்திருக்கிறார்.
அதில் திருவனந்தபுரத்தில் உள்ள 'உதய் சமுத்திரா' மற்றும் விமான நிலையத்திற்கு அருகில் உள்ள 'UD Shoot' ஆகிய நட்சத்திர ஹோட்டல்கள் மிகவும் பிரபலமானவை. பிரதமர் மோடி, ராகுல் காந்தி போன்ற தேசிய தலைவர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை இங்குதான் தங்குவார்கள்.
அதுமட்டுமல்லாமல், ராதாவுக்கு திரையரங்குகள், ஹோட்டல்கள், சினிமா ஸ்டுடியோக்கள் (சென்னையில் ஏஆர்எஸ் ஸ்டுடியோ, கேரளாவிலும் ஒரு ஸ்டுடியோ), திருமண மண்டபங்கள், பள்ளிகள் என பல்லாயிரக்கணக்கான சொத்துக்கள் உள்ளன.இயக்குனர் பாரதிராஜாவின் சினிமா வாழ்க்கை அவரது மகன் மனோஜிடம் கூட சரியாக போய் சேரவில்லை. ஆனால், ராதா இன்று பல்லாயிரம் கோடி சொத்துக்களுக்கு சொந்தக்காரியாக திகழ்கிறார்" என்று பாண்டியன் அந்த பேட்டியில் ராதாவின் வியக்கத்தக்க வளர்ச்சியை பற்றி விரிவாக பேசியுள்ளார்.