சீதாவுடன் விவாகரத்திற்கு பிறகு.. பார்த்திபன் இரண்டாம் திருமணம்.. மணப்பெண் யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!


நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமையாளராக தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி முத்திரை பதித்தவர் பார்த்திபன் ராதாகிருஷ்ணன். 

இவர் தமிழ் சினிமாவில் வித்தியாசமான படைப்புகளுக்காக எப்போதுமே தனித்துவமான அடையாளத்துடன் ஜொலித்து வருகிறார். 

தமிழ் சினிமா வேகமாக ஒரு பாதையில் சென்று கொண்டிருக்கும்போது, இப்படியும் ஒரு வகையான சினிமா உள்ளது என தொடர்ந்து ரசிகர்களுக்கு தன் படங்கள் மூலம் நினைவூட்டி வருபவர். 

நடிகை சீதாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட பார்த்திபன், பின்னர் அவரை விவாகரத்து செய்தார். இந்நிலையில், தன்னுடைய இரண்டாவது திருமணம் குறித்தும், இரண்டாவது மனைவி குறித்தும் பார்த்திபன் சமீபத்தில் பேசியிருப்பது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. 

இது தொடர்பாக அவர் பேசும்போது, "சீதாவுக்குப் பிறகு யாரையும் என் மனைவியாக ஏற்க முடியவில்லை என்பதால், அவருடன் வாழ்ந்த நினைவுகளை என் இரண்டாம் மனைவியாக ஏற்றுக்கொண்டேன். 

அவரைப் பிரிந்த பின் அவரது தாயார் இறந்தபோதுதான் நான் அவரை கடைசியாக சந்தித்தேன். இந்த வேகமான உலகில் உறவுகள் நிலையற்றதாக இருப்பதால், அதனுடன் பயணிக்காமல் அதற்கு பதிலாக நினைவுகளுடன் பயணிக்கத் தொடங்கினேன். 

அந்த நினைவுகளையே நான் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டேன். இதுவும் ஒரு விதமான மனைவியின் வடிவம்தான்" எனத் தெரிவித்துள்ளார். பார்த்திபன் இவ்வாறு கூறியிருப்பது பலருக்கும் ஆச்சரியத்தையும், அதே சமயம் ஒருவிதமான நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

உறவுகளின் நிலையற்ற தன்மையை உணர்ந்து, கடந்த கால நினைவுகளையே தனது வாழ்க்கையின் ஒரு அங்கமாக அவர் கருதும் விதம் பலரையும் சிந்திக்க வைத்துள்ளது. 

பார்த்திபனின் இந்த வித்தியாசமான கண்ணோட்டம் அவரது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.