விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் "சிறகடிக்க ஆசை" சீரியலில் வில்லியான ரோகிணியின் தோழியாக வித்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை ஸ்ருதி நாராயணன்.
இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், சமீபத்தில் ஸ்ருதி நாராயணனின் அந்தரங்க வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலானது.
இது மார்பிங் செய்யப்பட்ட வீடியோவா அல்லது காஸ்டிங் கவுச் சம்பவமா என பல்வேறு யூகங்கள் கிளம்பின. இந்த வீடியோ இன்ஸ்டாகிராம், எக்ஸ், டெலிகிராம் போன்ற சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. வீடியோ வெளியானவுடன் ஸ்ருதி நாராயணன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தை பிரைவேட்டாக மாற்றினார்.
இது ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், இன்று ஸ்ருதி நாராயணன் மீண்டும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தை பப்ளிக்காக மாற்றியுள்ளார். அதில் புடவையில் எடுத்த தனது புதிய போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
மேலும், தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஒரு ரீல்ஸ் வீடியோவை பதிவிட்டு, தன்னை பற்றி பரவி வரும் வீடியோவுக்கு பதிலடி கொடுத்துள்ளார். அந்த வீடியோவில் ஒரே மாதிரியான முக சாயலில் இருக்கும் இரண்டு பெண்களை காட்டியுள்ளார்.
அதில் ஒருவர் உண்மையானவர் என்றும், மற்றொருவர் ஏஐ மூலம் உருவாக்கப்பட்டவர் என்றும் குறிப்பிட்டு, சரியான நபரை கண்டுபிடிக்கவும் கூறியுள்ளார்.
பின்னர், யார் உண்மையான பெண், யார் ஏஐ மூலம் உருவாக்கப்பட்டவர் என்பதையும் அந்த வீடியோவில் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். இதன் மூலம் தன்னைப்பற்றி பரவும் அந்த வீடியோ ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மார்பிங் செய்யப்பட்டது என்பதை ஸ்ருதி நாராயணன் சூசகமாக தெரிவித்துள்ளார்.
ஸ்ருதி நாராயணனின் இந்த பதிலடி வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதன் மூலம் அவர் தன்னைப்பற்றி பரவும் தவறான தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முயற்சித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.