கோலிவுட் வட்டாரங்களில் தற்போது பரபரப்பாக ஒரு பேச்சு அடிபடுகிறது. நடிகைகள் திருமணப் பேச்சு எடுத்தாலே, அவர்களை காதலிக்கும் நடிகர்கள் கம்பி நீட்டி விடுகிறார்களாம்!
நடிகர்களை காதலிக்கும் பல முன்னணி நடிகைகளுக்கும் திடீரென ஒரு கட்டத்தில் பிரேக்கப் செய்து பிரியும் நிலை ஏற்படுவதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது. சினிமாவில் ஒரு சில பிரபலங்கள் மட்டுமே உண்மையாக காதலித்து, காதலித்த பெண்ணை திருமணம் செய்துகொண்டு கடைசி வரை சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர்.
ஆனால், இன்றைய அவசர யுகத்தில் காதலுக்கு மரியாதை இல்லாமல் போய்விட்டது என்றும், பலரும் காஜுயை கழித்து கொள்ளவே அலைவதாக சினிமா வட்டாரங்கள் முணுமுணுக்கின்றன.
சமீபத்தில் ஒரு முன்னணி நடிகை, தனது காதலரால் ஏமாற்றப்பட்டு கண்ணீருடன் பிரிந்த சம்பவம் கோலிவுட் வட்டாரங்களில் ஹாட் டாக்காக பேசப்படுகிறது.
பல வருடங்களாக காதலித்து வந்த அந்த நடிகை, தற்போது காதலரை விட்டு கண்ணீருடன் பிரிந்துவிட்டார் என்கின்றனர். நடிகையை சில ஆண்டுகளாக நன்றாக அனுபவித்துவிட்டு, தற்போது போரடித்துவிட்டதால், நடிகர் இன்னொரு இளம் நடிகையுடன் ரகசியமாக தொடர்பில் இருப்பது தெரிய வந்ததே இந்த பிரேக்கப்பிற்கு காரணம் எனவும் கூறுகின்றனர்.
பால் போன்ற மேனி அழகைக் கொண்ட அந்த நடிகையை பார்த்ததுமே, அந்த நடிகருக்கு ஃபயர் பற்றிக்கொண்டதாம். அதுவும், நடிகையுடன் உச்சகட்ட காட்சியில் நடிக்க அல்வா போல சான்ஸ் கிடைத்ததும், நடிகையும் தாராளமாக நடிகருடன் இணைந்து கெமிஸ்ட்ரியை வொர்க்கவுட் செய்ய, இருவருக்கும் மனதளவில் சில விஷயங்கள் ஒத்துப்போக, இருவரும் சில ஆண்டுகள் ஒன்றாக இருந்தனர்.
ஆனால், தற்போது இளம் நடிகை ரோஸ் மில்க் பேபியுடன் நடிகருக்கு ஏற்பட்டுள்ள ரகசிய காதல் நடிகைக்கு தெரிந்ததும் தான் பிரச்சனை வெடித்தது என்கின்றனர் கோலிவுட் வாசிகள்.
உச்ச கட்டமாக, ரோஸ் மில்க் நடிகையுடன் ஆடையின்றி காதலன் இருக்கும் புகைப்படங்கள் சிலவும் அம்மணியின் கண்களை எட்டியிருக்கிறது.
நடிகையை காதலர் ஏமாற்றி வருகிறார் என்கிற சேதியை, நடிகருக்கு பிடிக்காத சிலர் நடிகையின் காதுகளில் விழும்படி கொளுத்திப்போட, நடிகை காதலர் தன்னை ஏமாற்றுகிறாரா இல்லையா என்பதை சோதிக்க, திருமணம் செய்துகொள்ளலாம் என டார்ச்சர் கொடுக்க ஆரம்பித்துவிட்டாராம்.
ஆனால், இப்போதைக்கு வேண்டாம் என கடந்த சில மாதங்களாக நடிகர் தள்ளிப்போட்டுக் கொண்டிருக்க, நடிகை கார்னர் செய்ததும் இது செட்டாகாது என நடிகையை அந்த நடிகர் கழட்டிவிட்டு விட்டதாக கிசுகிசுக்கள் கிளம்பியுள்ளன.
ஏற்கனவே, முதல் காதலரும் இப்படித்தான் திருமண பேச்சை எடுத்ததும் அப்பாவுக்கு பயந்துவிட்டு நடிகையை கழட்டிவிட்டு எஸ்கேப் ஆனார். இப்போது ரொம்பவே நம்பிக்கையாக இருந்த காதலரும் மோசம் செய்துவிட்டாரே என ரூமை பூட்டிக் கொண்டு 2 நாட்கள் ஷூட்டிங் ஏதும் போகாமல் நடிகை கதறி அழுததாகவும் பேச்சுக்கள் புகைந்து வருகின்றன.
இந்த சம்பவம் கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகைகளின் காதல் வாழ்க்கை ஏன் இப்படி முடிகிறது என பலரும் கவலை தெரிவித்து வருகின்றனர்.
0 கருத்துகள்