முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் விஜய், தற்போது 'ஜனநாயகன்' படத்தில் நடித்து முடித்துவிட்டு முழுநேர அரசியலில் ஈடுபடவுள்ளார். இதனையடுத்து விஜய் தொடர்பான பழைய வீடியோக்கள் இணையத்தில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகின்றன.
அந்த வரிசையில், நடிகையும் பரதநாட்டிய கலைஞருமான சொர்ணமால்யா, விஜய்யை பேட்டியெடுத்த பழைய வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
'திருமலை' திரைப்படம் வெளியாவதற்கு முன்பு விஜய் அளித்த பேட்டி ஒன்றில், தொகுப்பாளினியாக இருந்த சொர்ணமால்யா விஜய்யிடம் சில கேள்விகளை கேட்கிறார்.
அப்போது, 'திருமலை' படத்தில் விஜய் லோக்கல் ஸ்லாங்கில் பேசியது குறித்து கேள்வி எழுப்பிய சொர்ணமால்யா, அதே போல பேசி காட்டும்படி விஜய்யை கேட்டுள்ளார்.
அதற்கு விஜய், மிகவும் ஜாலியாகவும் அதே நேரத்தில் புத்திசாலித்தனமாகவும் பதிலளித்தார். லோக்கல் ஸ்லாங்கில் பேசும்படி கேட்ட சொர்ணமால்யாவுக்கு பதிலளித்த விஜய், "இல்ல தெரியாமத்தான் கேக்குறேன், டிவில ஒரு பேட்டியிலேயே படத்தோட கதை, வசனம் எல்லாம் கேட்டுட்டா எப்படி? ஒழுங்கா தியேட்டருக்கு வந்து படத்தை பாரு" என்று அசத்தலாக லோக்கல் ஸ்லாங்கில் பதிலளித்து அனைவரையும் சிரிக்க வைத்தார்.
விஜய்யின் இந்த பதிலைக் கேட்டு சொர்ணமால்யா உட்பட அங்கிருந்த அனைவரும் சிரித்து விட்டனர். விஜய்யின் இந்த புத்திசாலித்தனமான மற்றும் நகைச்சுவையான பதில், கேள்வியை ஜாலியாக சமாளித்ததோடு மட்டுமல்லாமல், தனது படத்தையும் புரொமோஷன் செய்யும் விதமாக அமைந்தது.
லோக்கல் ஸ்லாங்கில் பேசிக் காட்ட சொன்ன கேள்விக்கு, தியேட்டருக்கு வந்து படத்தை பாருங்க என்று விஜய் லோக்கல் ஸ்டைலில் கூலாகவும் மாஸாகவும் பதிலளித்தது ரசிகர்களை கவர்ந்துள்ளது.
விஜய் அரசியலில் ஈடுபட உள்ள இந்த தருணத்தில், இந்த பழைய பேட்டி வீடியோ தற்போது மீண்டும் வைரலாகி வருகிறது. விஜய்யின் ரசிகர்கள் இந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
Chennai Tamil Slang la Thalapathy Vijay 🔥 🔥
— இன்பா (@onlyvijay74) March 4, 2025
Old is Gold#JanaNayagan #Thirumalai #ThalapathyVijay pic.twitter.com/C8DYoV0VFu
மேலும், விஜய்யின் புத்திசாலித்தனத்தையும், நகைச்சுவை உணர்வையும் பலரும் பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
0 கருத்துகள்