பிரபல சீரியல் நடிகை பிரவீனா சமீபத்திய பேட்டி ஒன்றில் சீரியல்களில் வில்லி கதாபாத்திரங்களில் நடிப்பது பற்றி தன்னுடைய பார்வையை பதிவு செய்தார்.
எனக்கு எவ்வளவு கோடி ரூபாய் கொடுத்தாலும் வில்லி கதாபாத்திரங்களில் நடிக்க தெரியாது. அப்படியான கதாபாத்திரங்களில் நான் நடிக்க மாட்டேன்.
ஆனால், நான் நடித்த ராஜா ராணி என்ற சீரியலில் தன்னுடைய கதாபாத்திரம் நேர்மறையான கதாபாத்திரம் என்றாலும் கூட பல காட்சிகளில் நான் செய்யும் செயல்கள் வில்லத்தனமாக காட்டப்பட்டன.
இது எனக்கு தாமதமாகத்தான் புரிய வந்தது. ஒரு கட்டத்தில் நான் நடித்த காட்சிகளை பார்த்து என்னுடைய நெஞ்சில் பெரிய கல்லை வைத்தது போன்ற ஒரு வலி உணர்வு ஏற்பட்டது.
இரவெல்லாம் தூக்கம் இல்லாமல் தவித்தேன். படப்பிடிப்பின் போதே இயக்குனரிடம் இதைப் பற்றி கேட்டிருக்கிறேன். கெஞ்சி கேட்டிருக்கிறேன். எதற்காக இப்படி கதாபாத்திரத்தை வைத்திருக்கிறீர்கள்..? எதற்கு இப்படி சத்தமாக வசனம் பேசுவது போன்ற காட்சிகள்..? என்று நான் கேட்டிருக்கிறேன்.
அப்போது உங்களுடைய கதாபாத்திரம் நேர்மறையான கதாபாத்திரம் தான்.. ஆனால் நீங்கள் கொஞ்சம் கண்டிப்பான ஆள் அவ்வளவுதான் வில்லி போல சித்தரிக்கப்படவில்லை. கதை அப்படி கிடையாது என கூறினார்கள்.
நான் வேண்டுமானால் இந்த சீரியலில் இருந்து விலகிக் கொள்கிறேன். வேறு யாராவது என்னுடைய கதாபாத்திரத்தில் நடிக்க வைத்துக் கொள்ளுங்கள். இதற்கு மேல் நான் நடிக்க மாட்டேன் என்று கூறினேன்.
அதே நேரம் வில்லத்தனமான கதாபாத்திரங்களில் நடிக்ககூடியவர்களின் காலில் விழுந்து நான் வணங்குகிறேன். எப்படி தான் அப்படி வில்லத்தனமான கதாபாத்திரத்தில் அவர்கள் நடிக்கிறார்கள் என்று தெரியவில்லை.
ராஜா ராணி கதாபாத்திரத்தில் நான் சில காட்சிகளில் மோசமாக நடித்திருந்த காரணத்தினால் கமெண்ட் செக்ஷனில் என்னை திட்ட ஆரம்பித்து விட்டார்கள். அதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதனால் நான் எதிர்மறையான கதாபாத்திரங்களில் நான் நடிக்கவே மாட்டேன் என கதறுகிறார் நடிகை பிரவீனா.
0 கருத்துகள்