இரண்டு வார முடிவில் உலக அளவில் டிராகன் படம் செய்த மொத்த வசூல்..! அதிர வைக்கும் தகவல்..!

இரண்டு வார முடிவில் உலக அளவில் டிராகன் படம் செய்த மொத்த வசூல்..! அதிர வைக்கும் தகவல்..!

தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் சென்சேஷனல் ஹீரோவாக பிரதீப் ரங்கநாதன் உயர்ந்துள்ளார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான "டிராகன்" திரைப்படம், "லவ் டுடே" படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து பிளாக்பஸ்டர் ஹிட் அடித்துள்ளது. 

Advertisement

இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்த இந்த படத்தில், பிரதீப் ரங்கநாதனுடன் அனுபமா பரமேஸ்வரன் மற்றும் கயாடு லோஹர் கதாநாயகிகளாக நடித்தனர். 

மிஸ்கின், கவுதம் மேனன், விஜே சித்து மற்றும் ஹர்ஷாந்த் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து அசத்தினர். 

Dragon Movie Poster

சமீபத்தில் "டிராகன்" திரைப்படத்தின் வெற்றி விழா, படக்குழுவினர் ஒன்றிணைந்து கோலாகலமாக கொண்டாடப்பட்டது. 

இந்நிலையில், இப்படம் திரையரங்குகளில் வெளியாகி 13 நாட்களை வெற்றிகரமாக கடந்துள்ள நிலையில், உலக அளவில் வசூல் சாதனை படைத்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. 

Dragon Movie Success Celebration
வெளியாகியுள்ள தகவலின் படி, "டிராகன்" திரைப்படம் வெளியான 13 நாட்களில் உலக அளவில் 120 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இந்த பிரம்மாண்ட வசூல் மூலம், பிரதீப் ரங்கநாதன் தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக தன்னை நிலை நிறுத்தியுள்ளார். 

Pradeep Ranganathan in Dragon Movie

"டிராகன்" திரைப்படத்தின் இந்த அபார வெற்றி, படத்தின் கதைக்களம், திரைக்கதை மற்றும் நடிகர்களின் சிறப்பான நடிப்புக்கு கிடைத்த அங்கீகாரம் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 

Dragon Movie Box Office Collection

 வெகுஜன ரசிகர்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பே இந்த படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம். தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் "டிராகன்" திரைப்படம், இன்னும் பல வசூல் சாதனைகளை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்