அங்க இருந்துகிட்டு.. இதை பண்ணா எப்படி..? விஜய் குறித்து கேள்விக்கு நட்சத்திரங்கள் நகர்கிறது நடிகை விளாசல்..!

பிரபல இளம் நடிகையான துஷாரா விஜயன் சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் விஜய் மற்றும் அவரது அரசியல் எதிர்காலம் குறித்து தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். 

"சார்பட்டா பரம்பரை", "நட்சத்திரங்கள் நகர்கிறது" போன்ற படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய துஷாரா, ஒரு சமூக நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது அவரிடம் நடிகர் விஜய் முதலமைச்சர் ஆனால் பெண்களுக்கு என்ன திட்டம் செய்ய வேண்டும் என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. 

இதற்கு யாரும் எதிர்பாராத விதமாக மிகவும் முதிர்ச்சியான பதிலை அளித்துள்ளார் துஷாரா விஜயன். மற்றவர்கள் ஏதாவது கோரிக்கைகளை முன்வைப்பார்கள் என்று நினைத்திருந்த நிலையில், அவர் கூறிய பதில் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது. 

துஷாரா விஜயன் கூறுகையில், "விஜய் பெண்களுக்கான திட்டத்தை செய்யக்கூடிய இடத்தில் இருப்பதால்தான் இந்த கேள்வியை என்னிடம் கேட்கிறீர்கள். 

அப்படி என்றால் பெண்களுக்கு என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பது விஜய் சாருக்கு நன்றாகவே தெரியும். நான் சொல்லி தான் அதை விஜய் சார் செய்ய வேண்டும் என்ற சூழ்நிலை இல்லை. அதனால் நான் எதுவும் சொல்ல தேவையில்லை. 

ஒருவேளை நான் அரசியலில் இருந்து கொண்டு ஒரு கேள்வியை அல்லது ஒரு கோரிக்கையை முன் வைக்கிறோம் என்றால் அது வேறு விஷயம். ஆனால் நான் கோரிக்கை வைக்கக்கூடிய இடத்தில் இல்லை. 

ஆனால் விஜய் சாருக்கு பெண்களுக்கு, பெண்களின் பாதுகாப்புக்கு என்ன செய்ய வேண்டும் என்பது நன்றாகவே தெரியும். அந்த இடத்தில் அவர் இருக்கிறார். அதனுடைய வெளிப்பாடு தான் இந்தக் கேள்வி. எனவே நான் என் கோரிக்கை வைப்பதில் எந்த அர்த்தமும் கிடையாது. 

அங்க இருந்துகிட்டு.. இதை பண்ணா எப்படி..?

நான் அரசியல் களத்தில் இருந்து கொண்டு இதை செய்தால் கரெக்டா இருக்கும். இப்போது விஜய் சாருக்கு என்ன செய்ய வேண்டும், எப்போது செய்ய வேண்டும் என்று அவருக்கு தெரியும். நாம் சொல்லி செய்ய வேண்டிய இடத்தில் அவர் இல்லைங்க என்று தொகுப்பாளினியை விளாசியுள்ளார்.

அதனால் நாம் புதிதாக எதுவும் கோரிக்கை வைக்க தேவையில்லை" என்று மிகவும் தெளிவாகவும், நம்பிக்கையுடனும் பதிலளித்தார். துஷாரா விஜயனின் இந்த பதில் பலரையும் கவர்ந்துள்ளது. 

விஜய் மீது அவர் வைத்திருக்கும் நம்பிக்கையையும், அவரது முதிர்ச்சியான பார்வையையும் இந்த பதில் காட்டுவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், விஜய் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பார் என்ற நம்பிக்கையையும் துஷாரா விஜயனின் இந்த பதில் வெளிப்படுத்துகிறது.