மனோஜ் இறப்புக்கு மாரடைப்பு காரணம் அல்ல.. இது தான்.. பிரபல நடிகர் பகீர்..!


பிரபல நடிகரும் முன்னணி இயக்குனர் பாரதிராஜா அவர்களின் மகனுமான மனோஜ் கே பாரதிராஜா நேற்று மாரைடைப்பு காரணமாக உயிரிழந்தார். 

இந்நிலையில் இவருடைய இறப்பு குறித்து பிரபல நடிகர் தம்பி ராமையா தன்னுடைய பார்வையை பதிவு செய்து இருக்கிறார்.

மனோஜ் தம்பி எழுந்ததற்கு மாரடைப்பு காரணம் என்று சொல்கிறார்கள். ஆனால், உண்மையில் அவருக்கு இருந்த மன அழுத்தம் தான் காரணம். 

ஒரு வெற்றி பெற்ற ஒரு இயக்குனரின் மகன் என்ற மிகப்பெரிய சுமையை இந்த சமுதாயம் அவர் மீது தூக்கி வைத்து விட்டது. 

என்னப்பா அடுத்த படம் எப்போ.. என்ன பெரிய படம் ஏதும் இல்ல போல இருக்கு.. இப்படியான தொடர்ச்சியான கேள்விகளால் தம்பி மனோஜ் மிகப்பெரிய மன அழுத்தத்தில் இருந்தார். 

ஒரு மிகப்பெரிய இயக்குனரின் மகன் என்பது மனோஜ் இருக்கு மிகப்பெரிய சுமையாக மாறி போய்விட்டது. அதனால், உன்னுடைய அப்பா இப்படி ஜெயித்து விட்டார்.. நீ ஜெயிக்கவில்லையா.. நீ எப்போது ஜெயிக்கப் போற இது போல பிள்ளைகள் மீது அந்த சுமையை தூக்கி வைக்க வேண்டாம்.. 

இன்றைக்கு நிறைய பிள்ளைகள் இப்படியான சுமையை தூக்கிக்கொண்டு கடுமையான மன அழுத்தத்துடன் உலா வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் என்னவோ.. அவர்களுக்கு என்ன கிடைக்கிறதோ.. அப்படியே அவர்களை வாழ விடுங்கள்.. 

அவர்கள் மீது சுமையை தூக்கி வைக்காதீர்கள் என்று கண்ணீர் மல்க பேசியிருக்கிறார் தம்பி ராமையா. இவருடைய இந்த பேச்சு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

இதை பற்றி உங்களுடைய கருத்து என்ன..? என்பதை கமெண்ட் செக்ஷனில் பதிவு செய்யுங்கள்.