தமிழ் நடிகை காஜல் அகர்வால் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் லைவ் டெலிகாஸ்ட் என்ற திகில் வெப்சீரிஸ் ஒன்றில் நடித்திருந்தார்.
ஹாட்ஸ்டார் இல் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்ற இந்த வெப்சீரிஸ் படப்பிடிப்பு அனுபவம் குறித்து நடிகை காஜல் அகர்வால் சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்து கொண்டார்.
இந்த வெப்சீரிஸ் பிரதானமான காட்சிகள் அனைத்தும் சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காடு மலைப்பகுதியில் தான் நடைபெற்றது.
ஏற்காடு மலைப்பகுதியில் நடைபெற்ற படப்பிடிப்பு அனுபவம் குறித்து நடிகை காஜல் அகர்வால் தன்னுடைய அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். அவர் கூறியதாவது, இந்த படத்தின் படப்பிடிப்பை நடத்துவதற்கு ஒரு தனியாக இருந்த பங்களாவுக்கு எங்களை அழைத்துச் சென்றார்கள்.
அது இயக்குனர் வெங்கட் பிரபுவுடைய நண்பரின் பங்களா. மலையின் உச்சியில் அந்த பங்களா அமைந்திருக்கிறது. சுற்றி வேறு எந்த விஷயமும் இல்லை. அடர்ந்த காட்டுக்கு நடுவே அந்த பங்களா அமைந்திருக்கிறது.
அங்கு முதல் முறை போகும் போது உடம்பெல்லாம் சில்லென ஆகிவிட்டது. அந்த அளவுக்கு தனிமைப்படுத்தப்பட்ட ஒரு பங்களா அங்கே தான் படப்பிடிப்பு என்றார்கள் அப்போது எனக்கு பயமாக இருந்தது.
படம் திகில் படம் என்பதால் இந்த இடம் மிகச் சரியாக இருக்கும் என்று இயக்குனர் வெங்கட் பிரபு தேர்வு செய்ததற்கு காரணம் இருக்கிறது. ஏனென்றால் அங்கே முதல் முறை போகும் போதே ஒரு திகிலான அனுபவம் எங்களுக்கு கிடைத்தது. மிகப்பெரிய பங்களா அது. அழகானதும் கூட. படப்பிடிப்பு முடியும் வரை இரவு நேரங்களில் நான் தூங்கவே இல்லை.
அந்த பங்களாவில் ஒரு மிகப்பெரிய பால்கனி இருந்தது. அங்கிருந்து பார்த்தால் ஏற்காடு மலையின் பள்ளத்தாக்கு மிக பிரம்மாண்டமாக தெரியும். அதெல்லாம் சரி தான். ஆனால் அங்கு நிலவிய ஒரு அமானுஷ்யமான ஒரு சூழல் என்னை தூங்க விடவில்லை.
இரவில் தூங்கலாம் என்று படுக்கச் சென்றால் கதவை யாரோ டிக் டிக் என தட்டுவது போன்ற உணர்வு ஏற்படும். யார் தட்டுகிறார்கள் என்று சென்று பார்த்தால் அங்கே நிறைய குரங்குகள் விளையாடிக் கொண்டிருக்கும். கதவை திறப்பதற்கு முயற்சி செய்யும்.
இதனால் இரவு நேரத்தில் அவ்வளவு கொடுமைகளை அனுபவித்தேன். ஆனால், அந்த பங்களா மிகவும் அழகாக இருந்தது என்பதில் மாற்று கருத்து இல்லை. ஒரு திகில் படம் எடுப்பதற்கு சரியான இடம் தான் அது.
அந்த ஷூட்டிங் முடித்துவிட்டு கிளம்பும்போது இந்த இடத்தை விட்டு செல்கிறோமே என்ற ஏக்கமும் எனக்கு இருந்தது என பேசி இருக்கிறார் நடிகை காஜல் அகர்வால்.