விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் "பாக்கியலட்சுமி" ( Baakiyalakshmi ) சீரியல் இல்லத்தரசிகள் மட்டுமின்றி இளைஞர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
கணவரை பிரிந்து தனது பிள்ளைகளுக்காக போராடும் பாக்கியாவின் வாழ்க்கையை மையமாக கொண்டுள்ள இந்த சீரியல் பல எதிர்பாராத திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது.
தற்போது சீரியலில் இனியாவின் காதல் விவகாரம் பெரும் புயலை கிளப்பியுள்ளது. பாக்கியாவுக்காக பொறுமையாக இருந்த செல்வி கூட இனியாவின் செயலால் கோபமடைந்து வீட்டிற்கு வந்து சத்தம் போட்டு சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.இந்நிலையில், இனியாவிற்கு அவளுடைய விருப்பம் இல்லாமல் திருமணம் செய்து வைக்க கோபி மற்றும் ஈஸ்வரி தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். திடீரென நிச்சயதார்த்தம் என்று மாப்பிள்ளை வீட்டார்களை வரவழைத்துள்ளனர்.
பாக்கியா இந்த திருமணத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், கோபியும் ஈஸ்வரியும் அதனை பொருட்படுத்தாமல் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். ஆனால், இனியா தனது புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி இந்த கட்டாய திருமணத்தை தடுத்து நிறுத்தியுள்ளார்.
தனக்கு விருப்பமில்லாமல் திருமண ஏற்பாடு செய்வதாக அவர் நேரடியாக பொலிசில் புகார் அளித்துள்ளார். திருமண நிச்சயதார்த்தத்தை பொலிசார் வந்து நிறுத்தி விடுவார்கள் என்ற நம்பிக்கையில் இனியா தற்போது அமைதியாக காணப்படுகின்றார்.
இதனை பார்த்த ரசிகர்கள் இனியாவின் இந்த சமயோசித புத்தியை பாராட்டி வருகின்றனர். "கடைசியாக இனியா தன்னுடைய மூளையை உபயோகப்படுத்தி விட்டார் அருமை சூப்பர்" என்று சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
இனியாவின் இந்த அதிரடி முடிவு சீரியலின் அடுத்த கட்டத்தை மேலும் சுவாரஸ்யமாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொலிசார் வருகையால் நிச்சயதார்த்தம் நடைபெறுமா அல்லது வேறு திருப்பங்கள் நிகழுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
0 கருத்துகள்