நல்ல மனசு எல்லாருக்கும் இருப்பதில்லை.. நயன்தாராவை போட்டு தாக்கிய மீனா..?


நடிகை நயன்தாரா நடிப்பில் உருவாக இருக்கக்கூடிய மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குனர் சுந்தர் சி இயக்குகிறார். 

மட்டுமில்லாமல் இதில் நடிகைகள் மீனா குஷ்பூ உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. 

Advertisement

இந்த படத்தின் பூஜை சமீபத்தில் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது இந்த பூஜைக்கு மட்டும் ஒரு கோடி ரூபாய் செலவு செய்து இருக்கிறார் படத்தின் தயாரிப்பாளர் என்றெல்லாம் தகவல்கள் வெளியாகின. 

இது ஒரு பக்கம் இருக்க நடிகை நயன்தாரா அந்த பூஜையில் கலந்து கொண்ட சக நடிகை மீனாவுடன் பேசுவதை வேண்டுமென்றே தவிர்த்தார் என்பது போன்ற வீடியோ காட்சிகள் வைரலாகின.

நடிகை மீனாவே இரண்டு மூன்று முறை நடிகை நயன்தாராவுடன் வழிய சென்று பேச முயற்சித்த போதும் நடிகை நயன்தாரா கடமைக்கு என்று அவரிடம் பேசியதாக ரசிகர்கள் பலரும் அந்த வீடியோவை பார்த்து கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள். 

இது ஒரு பக்கம் இருக்க நடிகை மீனா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி ஒன்றை வைத்திருக்கிறார். அதில், தன்னை பற்றி ஆடுகள் என்ன சொல்கிறது என்பதை பற்றி சிங்கம் கவலை கொள்ளாது என்று கூறியுள்ளார். 

மேலும், நல்ல மனது எல்லோருக்கும் இருப்பதில்லை என்று இன்னொரு ஸ்டோரியையும் வைத்திருக்கிறார். 

இதனை பார்த்து ரசிகர்கள் நடிகை மீனா நயன்தாராவை தான் மறைமுகமாக இப்படி போட்டு தாக்கிக் கொண்டிருக்கிறார் என்று கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். 

ஏற்கனவே நடிகை நயன்தாரா பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி இருக்கும் நிலையில் தற்போது நடிகை மீனாவுடன் புது சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்