நடிகை பிரியா பவானி சங்கர் சமீபத்திய பேட்டி ஒன்றில் திரை துறையில் நான் செய்த மிகப்பெரிய தவறு என்று ஒரு விஷயத்தை கூறியிருக்கிறார்.
அது என்ன விஷயம் என்று வாருங்கள் பார்க்கலாம். இதுகுறித்து பேசிய நடிகை பிரியா பவானி சங்கர் ஒரு தயாரிப்பாளர் என்னை அணுகி மூன்று படங்களில் உங்களை ஹீரோயினாக ஒப்பந்தம் செய்கிறேன் என கூறினார்.
அவர் சொன்ன மூன்று படங்களில் முதல் இரண்டு படங்கள் பெரிய படங்கள் என்றாலும் ஹீரோயினுக்கு வேலை இல்லை. மூன்றாவதாக சொன்ன படம் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் இருக்கக்கூடிய படம்.
நான் அந்த மூன்றாவது படத்தில் மட்டும் நடிக்கிறேன் என்று கூறினேன். ஆனால், தயாரிப்பாளரோ இல்லை இல்லை நீங்கள் ஒப்பந்தமானால் மூன்று படத்திலும் ஹீரோயினாக ஒப்பந்தமாக வேண்டும். இது ஒரு காம்போ பேக்கேஜ் என்று கூறினார்.
மேலும், நீங்கள் நடிக்கக்கூடிய முதல் இரண்டு படத்தில் ஹீரோயினுக்கு வேலையே இல்லை என்று கூறுகிறீர்களே.. படம் வெளியாகி ஒரு இரண்டு மூன்று நாட்கள் இந்த படத்தில் ஹீரோயினுக்கு வேலை இல்லை என்று கூறுவார்களா..? அவ்வளவு தான்.. அடுத்த படம் உங்களுக்கு ரிலீஸ் ஆகும் வரை இந்த படத்தின் ஹீரோயின் என்று உங்களுக்கு மிகப்பெரிய ஒரு அறிமுகமும் அங்கீகாரமும் கிடைக்கும் நீங்கள் ஏன் அதனை புரிந்து கொள்ளக் கூடாது என்று கேள்வி எழுப்பினார்.
தயாரிப்பளார் அப்படி சொல்லியும் கூட நான் அந்த படத்தில் நடிக்க மறுத்து விட்டேன். அந்த காம்போ பேக்கேஜ் எனக்கு வேண்டாம். மூன்று படத்திலும் நான் நடிக்கவில்லை என்று விலகி விட்டேன்.
அப்போது எனக்கு இருந்த சினிமா அறிவு அவ்வளவுதான். ஆனால், தற்போது அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக அதனை ஏற்றுக் கொண்டு நடிக்க நான் தயாராக இருப்பேன். நான் திரைத்துறையில் எடுத்த தவறான முடிவு இது என்று பதிவு செய்திருக்கிறார் நடிகை பிரியா பவானி சங்கர்.
0 கருத்துகள்