தொடர்ந்து லீக் ஆகும் சீரியல் நடிகைகளின் அந்தரங்க வீடியோ..! லதா ராவ் கூறிய பகீர் தகவல்..!

சமீப காலமாக சீரியல் நடிகைகளின் அந்தரங்க வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், பட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட்மென்ட் செய்ய சொல்லி நடிகைகள் கட்டாயப்படுத்தப்படுவது குறித்த விவாதங்களும் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளன. 

பல சீரியல் நடிகைகள் இதுகுறித்து அளித்த பழைய பேட்டிகள் தற்போது சமூக வலைதளங்களில் மீண்டும் வைரலாகி வருகின்றன. அந்த வகையில், பிரபல சீரியல் நடிகை லதா ராவ் அவர்கள் பட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட்மெண்ட் செய்து கொள்ள கட்டாயப்படுத்தப்பட்டது குறித்து பேசிய பழைய பேட்டி ஒன்று தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. 

லதா ராவ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகை. "அப்பா", "திருமதி செல்வம்" போன்ற தொடர்களில் நடித்து இல்லத்தரசிகள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர். சின்னத்திரையில் புகழ்பெற்ற பின்னர், "தில்லாலங்கடி", "யங் மங் சங்", "நிமிர்ந்து நில்" போன்ற திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வெள்ளித்திரையிலும் தனது முத்திரையை பதித்தார். 

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் லதா ராவ் அவ்வப்போது தனது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். இந்நிலையில், லதா ராவ் அளித்த பழைய பேட்டி ஒன்றில் சினிமாவில் நடக்கும் அட்ஜஸ்ட்மென்ட் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். 

அதில் அவர் கூறியதாவது, "சில நடிகைகள் பட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட்மெண்ட் செய்து கொள்கிறார்கள். இது மீடியா துறையில் மட்டுமல்ல, அனைத்து துறைகளிலும் இப்படித்தான் இருந்து வருகிறது. 

பட வாய்ப்புக்காக படுக்கையை பகிர்வதும் பகிராமல் இருப்பதும் குறிப்பிட்ட அந்த நடிகைகளை பொறுத்தது. அட்ஜஸ்ட்மென்ட் விஷயத்தால் நானும் பல பட வாய்ப்புகளை இழந்துள்ளேன். அந்த இயக்குனர் மற்றும் படம் குறித்து நான் பேச விரும்பவில்லை" என்று லதா ராவ் தெரிவித்துள்ளார். 

லதா ராவின் இந்த பழைய பேட்டி தற்போது வெளியாகி இருக்கும் சீரியல் நடிகைகளின் வீடியோக்கள் தொடர்பான விவாதங்களுக்கு மேலும் வலு சேர்த்துள்ளது. 

பல ஆண்டுகளாக திரைத்துறையில் நிலவும் இந்த அட்ஜஸ்ட்மென்ட் கலாச்சாரம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது என்றும், இதற்கு எதிராக நடிகைகள் தைரியமாக குரல் கொடுக்க வேண்டும் என்றும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.