இதை சிவகுமார் பாத்தா என்ன பண்ணுவார்.. சர்ச்சைக்குரிய காட்சியில் ஜோதிகா.. எல்லாம் பணத்துக்காக தான் போல..!

நடிகை ஜோதிகா, சூர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட பிறகு சில ஆண்டுகள் திரையில் இருந்து விலகி இருந்தார். பின்னர் மீண்டும் நடிக்கத் தொடங்கிய அவர், தற்போது ஹிந்தி திரையுலகில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். 

Advertisement

அந்த வகையில், அவர் நடித்த 'டப்பா கார்ட்டெல்' எனும் வெப் தொடர் நெட்ஃபிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த வெப் தொடரில் ஜோதிகா நடித்துள்ள ஒரு காட்சி, அவரது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 

மும்பையை பூர்வீகமாகக் கொண்ட ஜோதிகா, தமிழில் 'வாலி' திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன்பின்னர், அவருக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் குவிந்தன. 

தனக்கு கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட ஜோதிகா, தனது நடிப்புத் திறமையால் குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகையாக உயர்ந்தார். சிம்ரன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த காலகட்டத்தில், அவருக்கு சரியான போட்டியாளராக ஜோதிகா விளங்கினார். 

இதற்கிடையில், 'பூவெல்லாம் கேட்டுப்பார்' திரைப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து நடித்தபோது, இருவருக்கும் காதல் மலர்ந்தது. இருவரது காதலுக்கும் சூர்யாவின் வீட்டில் முதலில் எதிர்ப்பு கிளம்பியது. இருப்பினும், குடும்பத்தினரின் சம்மதத்திற்காக பல வருடங்கள் காத்திருந்தனர். 

ஒரு வழியாக சம்மதம் கிடைத்ததும், சூர்யா மற்றும் ஜோதிகா திருமணம் சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இவர்களுக்கு தேவ் மற்றும் தியா என ஒரு மகனும், மகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. திருமணத்திற்குப் பின்னர், ஜோதிகா இல்லத்தரசியாக மாறி, சிறிது காலம் சினிமாவுக்கு ஓய்வு கொடுத்தார். 

முழுமையாக குடும்பத்தையும், குழந்தைகளையும் கவனித்து வந்த அவர், சில வருடங்கள் கழித்து '36 வயதினிலே' திரைப்படத்தின் மூலம் மீண்டும் திரையுலகில் ரீ-என்ட்ரி கொடுத்தார். தனது இரண்டாவது இன்னிங்ஸில், பெரும்பாலும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்தார். 

அப்படி அவர் நடித்த 'ராட்சசி', 'உடன் பிறப்பே' போன்ற படங்கள் அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தன. தமிழில் ஜோதிகா தொடர்ந்து நடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், அவர் ஹிந்தி திரையுலகில் கவனம் செலுத்தத் தொடங்கினார். 

'ஸ்ரீகாந்த்' உள்ளிட்ட ஹிந்தி படங்களில் நடித்த அவர், சூர்யாவையும் ஹிந்தி சினிமாவில் கவனம் செலுத்த ஊக்குவித்தார். இதன் காரணமாக, சூர்யா மற்றும் ஜோதிகா தங்களது குழந்தைகளுடன் மும்பையில் செட்டில் ஆகிவிட்டனர். 

இந்நிலையில், ஜோதிகா தற்போது 'டப்பா கார்ட்டெல்' எனும் அந்த வெப் தொடர் நெட்ஃபிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இந்த தொடரில், ஜோதிகா சிகரெட் பிடிக்கும் ஒரு காட்சியில் நடித்துள்ளார். 

இதனைப் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து, "அட நம்ம ஜோதிகாவா இப்படி?", "இந்த வயதில் இப்படி ஒரு காட்சியில் நடித்திருக்கிறாரே!" சிவகுமார் இதை பாத்தா என்ன பண்ணுவார்... என்று சமூக வலைத்தளங்களில் கமெண்ட் செய்து வருகின்றனர். 

மேலும், அந்த சிகரெட் பிடிக்கும் காட்சியின் ஸ்கிரீன் ஷாட்களை எடுத்து சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். ஜோதிகா சிகரெட் பிடிப்பது போன்ற காட்சியில் நடித்தது அவரது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்