பிரதீப் ரங்கநாதன் தமிழில் நடிகர் ரவி மோகன் (ஜெயம் ரவி) ஹீரோவாக நடித்த கோமாளி என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார்.
அதை தொடர்ந்து லவ் டுடே, டிராகன் என தொடர்ந்து இரண்டு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் இரண்டாம் கட்ட நடிகர்களின் பட்டியலில் பிரதீப் ரங்கநாதனும் இணைந்து விட்டார் என்று ஊடகங்கள் பலவும் செய்திகள் வெளியிட்டன. தொடர்ந்து இவருக்கு பட வாய்ப்புகளும் குவிந்து வருகிறது.
தமிழ் சினிமாவின் தற்போதைய நடிகர்களின் உச்சத்தில் இருக்கக்கூடிய பிரதீப் ரங்கநாதன் மார்க்கெட்டை சரசரவென கீழே இழுத்து போடும் அளவுக்கு விக்னேஷ் சிவன் ஒரு வேலையை பார்த்து இருக்கிறார் என்ற தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அது என்னவென்றால் தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி (LIK) என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் பிரதீப் ரங்கநாதன். இந்த படத்துடைய கதையின் ஒன் லைன் இணையத்தில் கசித்து இருக்கிறது.
அதன்படி, அப்பா மகன் இருவரும் ஒரே விலைமாதுவுடன் காதல் வயப்படுகிறார்கள். அதன்பிறகு நடக்கக்கூடிய சுவாரசியமான திருப்புங்கள் தான் கதை என கூறப்படுகிறது.
.jpg)
குழந்தை இருக்குன்னு சொல்லியும் விடல.. என் மார்பில் அதற்கு எதிராக.. இயக்குனர் டார்ச்சர்... போட்டு உடைத்த காஜல் அகர்வால்..!
ஒரே விலைமாதுவுடன் அப்பாவும் மகனும் காதல் வயப்படுவது என்ற கதையை தமிழ் சினிமா ரசிகர்கள் ரசிப்பார்களா.? தற்போது தான் வளர்ந்து கொண்டிருக்கும் பிரதீப் ரங்கநாதனுக்கு இப்படி ஒரு திரைப்படம் வெளியானால் அவருடைய உச்ச நட்சத்திரம் என்ற பிம்பம் உடைந்து போய்விடாதா..? பிரதீப் ரங்கநாதன் இந்த கதையை தெரிந்துதான் இந்த படத்தில் ஒப்பந்தம் ஆனாரா..? உள்ளிட்ட கேள்விகளை எழுப்பி விடுகிறார்கள் ரசிகர்கள்.
அதே சமயம் படத்தின் உண்மையான கதை இதுதான் என்ற அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகாத நிலையில் இது குறித்து படம் வெளியான பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று கடந்து செல்கிறார்கள் இணையவாசிகள்.
0 கருத்துகள்