நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அட்லி திரைப்படத்தின் OG SAMBAVAM என்ற பாடல் தற்போது வெளியாகியிருக்கிறது.
அரங்கம் அதிரும் இசை ஆர்ப்பாட்டமான பாடல் வரிகள் என அதகளமாக உருவாக்கியுள்ளார் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்.
இந்த பாடலை Vishnu Edavan எழுதியுள்ளார். GV Prakash Kumar, Adhik Ravichandran ஆகியோர் பாடியிருக்கின்றனர்.
நடிகர் அஜித்தின் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமைந்துள்ளது இந்த பாடல். நீண்ட நாட்களுக்கு பிறகு அஜித் பாடலை கேட்டு திருப்தி இந்த பாடலில் கிடைப்பதாக ரசிகர்கள் பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இது ஒரு பக்கம் இருக்க பாடல் வரிகள் மூலம் இந்த பாடலில் நடிகர் விஜய்யை இரண்டு சீண்டிருக்கிறார்கள்.
அது எதிர்சியாக நடந்தது என்று கூட படக்குழு கூறலாம்.. வேண்டுமென்றே வைத்தார்கள் என்று ரசிகர்களும் கூறலாம்.. ஆனால், எப்படியான வரிகள் இந்த பாடலில் இடம் பெற்றிருக்கிறது.. என்று இங்கே பார்க்கலாம்.
பாடல் நடுவே.. "பத்தாது டா உனக்கு தோட்டா.. சுத்தாதடா பேரைக் கேட்டா.. துப்பாக்கி, பீரங்கி ரெண்டுமே வந்தாலும் ஒ**ல சம்பவம்டா.." என்ற வரிகள் இடம் பெற்றுள்ளது. இதில், துப்பாக்கி அல்ல பீரங்கியும் சேர்ந்து வந்தாலும் சம்பவம் தான் என்று விஜய்யை சீண்டும் விதமாக வரிகள் உள்ளன.
அடுத்தது பாடலின் முடிவில் AK தான் ஒரிஜினல் கேங்ஸ்டர் என்ற வரிகள் இடம்பெற்றுள்ளது. நடிகர் விஜய்யின் கடைசி திரைப்படமான The GOAT படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் ஒரிஜினல் கேங்ஸ்டர் என்று விஜயின் மகன் சஞ்சய் என்ற கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்துவார்கள். அவர், GOAT விஜய்யை பழி வாங்க தன்னை போலவே நிறைய குளோனிங் மனிதர்களை உருவாக்கி வைத்திருப்பார்.
ஆனால், அது க்ளோனிங் கேங்ஸ்டர்.. ஒரிஜினல் கேங்ஸ்டர் என்றால் அது AK தான் என்று அழுத்தமாக சொல்லும் விதமாக பாடல் வரிகள் எழுதப்பட்டிருக்கிறது.